Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 2007-ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ‘சிவாஜி’ படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துடன் ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களை ஸ்ரேயா சரண் பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்தை முதன்முதலில் சந்திப்பதற்கு முன்பு தான் மிகவும் பயமாகவும் பதற்றமாகவும் இருந்ததாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார். ஆனால், படப்பிடிப்புத் தளத்திற்குள் தான் நுழைந்தபோது, ரஜினிகாந்த் அனைவரின் முன்னிலையிலும் எழுந்து நின்று தனக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்ததாக அவர் கூறியுள்ளார்.

இவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரமாக இருந்தும், தன்னை ஒரு புதுமுக நடிகை என்று பாராமல் எழுந்து நின்று மரியாதை கொடுத்தது தனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த எளிமையான குணத்தைப் பார்த்து தான் வியப்பில் உறைந்து போனதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Republic Tamil

மேலும், படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த் அனைவரிடமும் ஒரே மாதிரியான அன்புடனும் மரியாதையுடனும் பழகியதாக ஸ்ரேயா கூறியுள்ளார். ஒரு சாதாரண லைட் பாய் முதல் பெரிய நடிகர் வரை அனைவரையும் சமமாக நடத்துவது ரஜினிகாந்தின் தனிச்சிறப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "'அரசன்' ஸ்பாட்டில் அனிருத் திடீர் விசிட்!! 90 நிமிட காட்சிகளைப் பார்த்து மிரண்ட ராக்ஸ்டார்.. இணையத்தில் வைரல்!!

ரஜினிகாந்த் ஹீரோ என்று தெரியாமலேயே ‘சிவாஜி’ படத்தில் ஒப்பந்தம்!

‘சிவாஜி: தி பாஸ்’ படத்தின் தொடக்க விழா நடைபெறும் வரை, தனக்கு ஜோடியாக நடிக்கப் போவது ரஜினிகாந்த் என்ற விஷயம் தனக்குத் தெரியாது என்ற சுவாரசியமான தகவலையும் ஸ்ரேயா சரண் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர், ‘சிவாஜி’ படத்தில் நடிப்பதற்காக ஸ்ரேயாவை அணுகியபோது, படத்தின் கதையையோ அல்லது தனக்கு ஜோடியாக நடிக்கப் போவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற தகவலையோ இறுதிவரை அவரிடம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில் சென்னைக்கு வருமாறு மட்டுமே ஷங்கர் அவரிடம் கூறியுள்ளார். அதன்படி சென்னை வந்த ஸ்ரேயா, படத்தொடக்க விழாவில் ஏ.ஆர். ரஹ்மான், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகின் பல ஜாம்பவான்கள் வரிசையாக வருவதைப் பார்த்துள்ளார்.

அப்போது இயக்குநர் ஷங்கர், ஸ்ரேயாவிடம், “உங்களுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் ரஜினி சார் இவர்தான். அறிமுகமாகிக் கொள்ளுங்கள்” என்று கூறி அவருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்க  விஜய் மனைவி சங்கீதா லண்டனில் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..? பல நாடுகளில் சொத்து..!

இதைக் கேட்ட ஸ்ரேயா வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கப் போகிறோம் என்ற தகவல் தெரிந்ததும், அவருக்கு நடுக்கமே ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

முதல் நாள் ஒத்திகைக்குச் செல்வதற்கு முன்பாகவே இயக்குநர் ஷங்கரிடம், “சார், சூட்டிங்கில் ரஜினி சாரைப் பார்த்தால் நான் அப்படியே உறைந்து நின்றுவிடுவேன். தயவுசெய்து முன்னமே என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்துவிடுங்கள்” என்று பதற்றத்துடன் கேட்டுக் கொண்டதாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு ஷங்கர் பலமாக சிரித்ததாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

சில நிமிடங்களிலேயே பதற்றத்தைப் போக்கிய ரஜினி

ஆனால், ரஜினிகாந்தை சந்தித்த முதல் 5 நிமிடங்களிலேயே, அவர் தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் மிகவும் சிறப்பாக உணர வைப்பார் என்பதைப் புரிந்துகொண்டதாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 நிமிடங்களிலேயே, “இவரே நமது சிறந்த நண்பர்” என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, தனது பதற்றத்தை ரஜினிகாந்த் முழுமையாகப் போக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Republic Tamil

ரஜினிகாந்திற்கு நகைச்சுவை உணர்வு மிகவும் அதிகம் என்றும் ஸ்ரேயா தெரிவித்துள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் யாரையாவது விளையாட்டாக வம்புக்கு இழுத்துக்கொண்டே இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  மரண வெயிட்டிங்..! விஜய் ரசிகர்களால் நடுங்கும் ரஜினி..? பார்த்து பார்த்து செதுக்கும் நெல்சன்..!

தன்னிடமும் ரஜினிகாந்த் அடிக்கடி நகைச்சுவையாகப் பேசி லெக்-புல்லிங் செய்வார் என்றும் ஸ்ரேயா நினைவுகூர்ந்துள்ளார். “அங்கே பாரு, அவன் உன்னைத்தான் சைட் அடிக்கிறான் என்று நினைக்கிறேன்!” என்று மற்றவர்களைக் காட்டி தன்னிடம் விளையாட்டாகக் கூறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“ரஜினியின் எளிமை என்னை மிகவும் கவர்ந்தது”

படப்பிடிப்புத் தளம் முழுவதும் ரஜினிகாந்த் வெளிப்படுத்திய மனிதநேயமும், அனைவரையும் சமமாக நடத்தும் விதமும் தன்னை மிகவும் கவர்ந்ததாக ஸ்ரேயா சரண் தெரிவித்துள்ளார்.

பெரிய உயரத்தை அடைந்த பிறகும் ரஜினிகாந்த் காட்டும் அடக்கமும், தனது வேலையின் மீது அவர் கொண்டிருக்கும் காதலும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Republic Tamil

ரஜினிகாந்தின் வாழ்க்கைப் பயணம் தனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்ததாகவும் ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அந்தப் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் தன்னிடம் காட்டிய எளிமையும் அன்பும் இன்றளவும் தனது மனதில் நீங்காத நினைவாக இருப்பதாக ஸ்ரேயா சரண் தெரிவித்துள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago