தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சங்கீதா தம்பதிக்கு 1998ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு
இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் சங்கீதா பங்கேற்பதில்லை எனவும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமைகோரி மனுதாக்கல் செய்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தானும் தனது கணவரும் ஒரே வீட்டில் பிரிந்து வாழ்ந்து வந்தோம். எனக்கு விஜய் உரிய ஜீவனாம்சம்
வழங்க வேண்டும் என்றும் சங்கீதா அமணுவில் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்த விசாரணைக்கு வந்தபோது தம்பதியர் இருவரையும் சமர சமயத்திற்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட்ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார்.
இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்பநலன நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று முறை விசாரணைக்கு வந்த நிடையில்
பிரபலங்கள் என்பதாலும் பாதுகாப்பு காரணங்களாலும் நேரில் ஆஜராவதில்லிருந்து விலக்களிக்கப்பட்டு காணொளி காட்சி மூலமாக ஆஜராக நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிடையில் இந்த வழக்கு ஆகஸ்ட் ஏழாம் தேதி நீதிபதி சுஜாதா முன்பு விசாரணைக்கு வந்தது. காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை தொடங்கியது. சட்டப்பிறவை கூட்டத்தொடர் நடைபெறுவதால் வேறு தேதிக்கு ஒத்தி வைக்க விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சங்கீதா தரப்பில் வெள்ளிக்கிழமையே விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி சுஜாதா முன்னிடையில் லண்டனில் இருந்தபடி சங்கீதா காணொளி வாயிலாக ஆஜராகி சுமார் 20 நிமிடங்கள் விளக்கம் அளித்தார். மூடப்பட்ட அறையில் விஜய் மற்றும் சங்கீத தரப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் கணவர் விஜய் மீது தொடரப்பட்ட விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை கோறும் வழக்குகளை தாமாகவே முன்வந்து வாப்பஸ் பெற்றுக் கொள்வதாக சங்கீதா தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுஜாதா விஜய் சங்கீதா விவாகரத்து மணுவை முடித்து வைப்பதாக அறிவித்தார். தானும் தனது கணவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தனது மகன் மகள் குறித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருவதால் பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு சங்கீதா இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஜேசன் சஞ்சய் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலலானதும் குறிப்பிடத்தக்கது.
