Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

வியட்நாமில் அண்மையில் நிகழ்ந்த கோர படகு விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாமின் புகழ்பெற்ற ஃபூ குவோக் தீவு அருகே உள்ள ஹான் மே ருட் ந்கோய் தீவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விபத்து நிகழ்ந்தது. கடலில் திடீரென ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் உயரமான அலைகள் காரணமாக, மூடப்பட்டிருந்த அதிவேகப் படகு மூன்றே நிமிடங்களில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

படகில் பயணம் செய்த 32 இந்தியர்களில், முன்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் ஜன்னல் வழியாக தப்பிய நிலையில், பின்பகுதியில் இருந்த 15 பேர் படகுக்குள்ளேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரபல சமூக சேவகர் வினயகுமார் (விஜயகுமார்) மற்றும் தர்மபுரியைச் சேர்ந்த தொழிலதிபரும் தன்னார்வலருமான செந்தில் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வினயகுமாரின் மறைவு அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும் மட்டுமின்றி, அவரது உதவியால் பயனடைந்த ஏராளமான மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்க  “கொடூர பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு – அதிரடி முடிவு: நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை!

கொரோனா பெருந்தொற்றின் உச்சக்கட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதை கண்டு வேதனை அடைந்த வினயகுமார், தனது சொந்த முயற்சியால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைத்துக் கொடுத்தார். அவரது இந்த மனிதநேயச் செயல் பல நூறு உயிர்களைக் காப்பாற்றியது.

அதுமட்டுமின்றி, இரத்த தான முகாம்களை தொடர்ந்து நடத்துவதிலும், தானே 100-க்கும் மேற்பட்ட முறை இரத்த தானம் வழங்குவதிலும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். “இரத்த தானம் மூலம் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும்” என்ற விழிப்புணர்வை இளைஞர்களிடையே தொடர்ந்து ஏற்படுத்தி வந்தார்.

அவரது நண்பர்கள் கூறுகையில், “கொரோனா காலத்தில் ஆக்சிஜன் மிகவும் அவசியமான நேரத்தில், அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை முதலில் முன்வைத்தவர் வினயகுமார். இரத்த தானம் செய்ய வேண்டும் என்று எங்களை எப்போதும் ஊக்குவிப்பார். தானே 100-க்கும் மேற்பட்ட முறை இரத்த தானம் செய்துள்ளார்” என்று உருக்கமாக தெரிவித்தனர்.

இதையும் படியுங்க  "குடி வெறி.. உதிர்ந்த உயிர்! பெற்ற மகனையே தீக்கிரையாக்கிய தந்தை! நெஞ்சை உலுக்கும் தூத்துக்குடி சம்பவம்!"

மேலும், “அவர் 24 மணி நேரமும் சமூகப் பணிகளிலேயே ஈடுபட்டு இருப்பார். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் நிதியுதவி வழங்குவார். நேரில் வர முடியாத சூழலிலும் தனது பங்களிப்பை தவறாமல் செய்துவிடுவார். எந்த இரத்த தான முகாமாக இருந்தாலும் முதலில் வந்து நிற்பவர் அவர்தான்” என்றும் நண்பர்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமார், தொழிலதிபராகவும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் முக்கிய உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். விபத்து நிகழ்ந்த நாளே அவரது பிறந்தநாளாக இருந்தது என்பது குடும்பத்தினரின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தூதரகத்துடன் இணைந்து தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் அந்தப் படகின் மாலுமியை வியட்நாம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறைந்தாலும் வினயகுமார் செய்த மனிதநேயப் பணிகள் என்றும் அழியாது என்றும், அவர் தொடங்கிய சமூகப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கண்ணீருடன் உறுதியளித்துள்ளனர்.

இதையும் படியுங்க  மரத்தைக் கட்டிப்பிடித்து கதறிய தமிழ்நாட்டின் 'சிப்கோ' பெண் விவசாயி! கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய பாசப் போராட்டம்!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago