https://republictn.com/

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் தவெக ஆட்சியில் முன்னிறுத்தப்படுவது, அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்ட, நீண்ட கால அனுபவம் கொண்ட மூத்த உறுப்பினரை சபாயாயகராகத் தேர்ந்தெடுப்பதே மரபு. செங்கோட்டையன் அதிமுகவின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவராக இருந்ததோடு, சட்டமன்ற உறுப்பினராகப் பலமுறை பணியாற்றிய ஈடு இணையற்ற அனுபவம் கொண்டவர்.

மூன்று முறைக்கும் மேலாக எம்.எல்.ஏ-வாக இருந்தவர்கள் மட்டுமே இத்தகைய பொறுப்புகளுக்குப் பரிசீலிக்கப்படுவது விதியாக இருந்து வருகிறது. அந்த வகையில், செங்கோட்டையனின் அரசியல் அனுபவம், சட்டசபை விதிகள் மீதான அவரது ஆளுமை, அவரை இந்த இடத்திற்குத் தகுதியானவராக மாற்றுகிறது.

தற்போது திமுகவின் பெரும் வீழ்ச்சி, தவெகவின் எழுச்சி எனத் தமிழக அரசியல் ஒரு புதிய திசையை நோக்கித் திரும்பியுள்ள நிலையில், சட்டமன்றத்தை வழிநடத்த ஒரு அனுபவம் வாய்ந்த நபர் அவசியமாகிறார். ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் அளித்துள்ள தீர்ப்பும், வாரிசு அரசியலுக்கு எதிரான இளைஞர்களின் மனநிலையும் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த இக்கட்டான சூழலில், அனுபவம் மிக்க செங்கோட்டையன் போன்றவர்கள் சபாநாயகர் இருக்கையில் அமர்வது, சபையின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், விவாதங்களைச் சீராக வழிநடத்தவும் உதவும்.

அனுபவத்திற்கும் நேர்மைக்கும் மதிப்பளிக்கும் வகையில் செங்கோட்டையன் சபாநாயகராக முன்னிறுத்தப்படுவது விஜய் எடுத்த முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago