https://republictn.com/

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே, மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய கூட்டணி மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு (118 இடங்கள்) இன்னும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெகவுக்கு 5 இடங்களை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக-காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்​திய காங்​கிரஸ் அமைப்​புப் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், “தமிழகத்​தில் ஆட்​சி​யமைக்க ஆதரவு கோரி இந்​திய தேசிய காங்​கிரஸிடம் தவெக தலை​வர் விஜய் கோரிக்கை விடுத்​துள்​ளார். தமிழகத்​தில் அரசி​யலமைப்பை அதன் உணர்​வின்​படி பாது​காக்க உறு​திபூண்ட ஒரு மதச்​சார்​பற்ற அரசாங்​கத்​துக்கே மக்​கள் அதி​காரம் அளித்துள்ளனர். இதில் காங்​கிரஸ் தெளி​வாக இருக்​கிறது.

எந்த வகை​யிலும் பாஜக​வும், அதன் கைப்​பாவை​களும் தமிழக அரசை நடத்​து​வதை காங்​கிரஸ் அனு​ம​திக்​காது என்​ப​தி​லும் உறு​தி​யாக உள்​ளது. அதன்​படி, தேர்​தல் தீர்ப்​பில் பிர​திபலித்​துள்ள மாநிலத்​தின் உணர்​வு​களைக் கருத்​தில் கொண்​டு, விஜய்​யின் கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்​கு​மாறு தமிழக காங்​கிரஸ் கமிட்​டிக்கு காங்​கிரஸ் தலைமை உத்​தர​விட்​டுள்​ளது” என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவை வழங்குமாறு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தவெக தலைவர் விஜய் முறைப்படி கோரிக்கை விடுத்திருந்தார். அரசியலமைப்பு கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்ட, மதச்சார்பற்ற, முற்போக்கான, மக்கள் நலன் சார்ந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான மிகத் தெளிவான, வலுவான, மகத்தான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வழங்கியுள்ளனர். அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு விஜய் தலைமையில் இயங்கும் தமிழக வெற்றி கழகத்தையே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, இந்தியாவில் மதச்சார்பற்ற, முற்போக்கான, மக்கள் நலன் சார்ந்த அரசியலின் அடித்தளமாகத் திகழ்வதுடன், அத்தகைய அரசியலுக்காகவே உறுதியாக நிற்கிறது. தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய இந்தத் தேர்தல் ஆணையை மதிப்பதும், அதனை நிலைநிறுத்துவதும், அதனைச் செயல்படுத்த உதவுவதும் நமது அரசியலமைப்பு கடமையாகும். அதற்கிணங்க, தமிழக காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும், தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்குத் தங்களது முழு ஆதரவை வழங்க முடிவெடுத்துள்ளன.

இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை இல்லாத எந்தவொரு வகுப்புவாத சக்தியையும் இந்த கூட்டணியில் சேர்க்காமல் தமிழக வெற்றி கழகம் விலக்கி வைப்பதை அடிப்படையாகக் கொண்டே எங்களது ஆதரவு வழங்கப்படும்.

தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக காங்கிரஸுக்கும் இடையிலான இந்தக் கூட்டணி, வரும் பல பத்தாண்டுகளுக்கு தந்தை பெரியாரின் சமூக நீதி கொள்கைகள், பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பு கொள்கைகள் மீது உறுதியான பற்றுறுதியுடன் செயல்பட்டு, பெருந்தலைவர் காமராஜரின் பொற்காலத்தை தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டுவரப் பாடுபடும்.

இரு கட்சிகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை, உரிய பங்களிப்பு மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த இந்தக் கூட்டணி, தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தல்களுக்கும் பொருந்தும்.

ஒரு மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசாங்கத்தை அமைப்பதற்காக தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதித்து நடப்போம் என்றும்; தமிழ்நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றும் விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக உறுதியளிக்கின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago