Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தவெக ஆட்சியை கவிழ்க்க முக்கியமாக செயல்பட்டது இரண்டு பேர். ஒன்று அசோக் குமார் மற்றொன்று நரேஷ். அசோக் குமாரை முதலாவதாக நரேஷ வந்து சென்னையில் சந்திக்கிறார். அப்போது ”தவெக எம்எல்ஏ-க்களை நம்ம பர்சேஸ் பண்ணும். நாம மேக்ஸிமம் ஒரு மூணு பேர் வேணும். அவங்களுக்கு மினிஸ்டர் பதவி கொடுப்பதற்கு பேசி அவங்களுக்கு வாங்கி கொடுத்தலாம். அதுக்கும் தயார். அதனால நீங்க எவ்வளவு சீக்கிரம் எம்எல்ஏக்களை பர்சேஸ் பண்ண முடியுமோ பர்சேஸ் பண்ணுங்க” என சொல்லிவிட்டு நரேஷுக்கு அசைன்மென்ட் கொடுத்தவர்தான் இந்த அசோக் குமார்.

அதன் பிறகு நரேஷ் வந்து யோசித்து அவருக்கு ஓட்டுனராக இருந்த கிருஷ்ணா என்பவர் தற்போது ஐபிடிஎஸ் திருநாவுக்கரசுக்கு ஓட்டுனராக இருந்த காரணத்தினால் கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லி ”திருநாவுக்கரசை பார்க்க வேண்டும் எனச் சொன்ன உடனே திருநாவுக்கரசும் சேர்ந்து நரேஷை வந்து சந்திக்கிறார். இரண்டு பேருமே சந்தித்த பிறகு இருவரும் சேர்ந்து சென்னை, கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அசோக் குமாரை வரவைத்து நரேஷ் அறிமுகப்படுத்துகிறார். ”நாம என்ன எதிர்பார்க்கறோமோ நம்ம சொன்ன வேலைய செஞ்சு கொடுப்பாரு” எனச் சொல்லிவிட்டு அசோக் குமாரிடம் அறிமுகப்படுத்துகிறார்.

உடனே அசோகுமார் ”எம்எல்ஏ-க்களை பர்சேஸ் பண்ணும். அவர்களுக்கு மேக்ஸிமம் 30 டு 50 கோடி நாம் கொடுக்கறதுக்கு தயார். அது மட்டுமில்லாமல் மேக்ஸிமம் மூணு பேருக்கு நம்ம அமைச்சர் பதவியும் கொடுக்கலாம்” என அசோக் குமார் நரேஷ் மற்றும் திருநாவுக்கரசிடம் கூறுகிறார். உடனடியாக திருநாங்கரசு ”சரி இந்த வேலைய நாம பண்ணலாம்” எனச்சொல்லி விட்டு அவரும் அசைன்மெண்ட் எடுத்துக்கொள்கிறார்.

இதையும் படியுங்க  ஆட்சியைக் கவிழ்க்க தயாரான 8 தவெக எம்.எல்.ஏ-க்கள்..! செந்தில் பாலாஜி நெட்வொர்க்கின் பகீர் பின்னணி..!

அதன் பிறகு திருநாவரசுடன் இணைந்தவர் தியாகராஜன். தியாகராஜன் மூலமாக சிலர் தற்போது கைதாகி சிறையில் இருக்கக்கூடிய நபர்களை இந்த அசைன்மெண்ட்டுக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் தொடர்ச்சியாக பல எம்எல்ஏ-க்களிடம் பேசி இருக்கின்றனர்.

சென்னை கிண்டி இருக்கும் அந்த நட்சத்திர ஹோட்டலில் இரண்டு நாள் ரூம் போட்டு அங்கே தொடர்ச்சியாக இவர்கள் பேசி கொண்டிருக்கின்றனர். அதில் திருநாவுக்கரசு போதையில் ஊத்தங்கரை எம்எல்ஏக்கு கால் பண்ணி பேசியுள்ளார். ஊத்தங்கரை எம்எல்ஏ டாக்டர் இளையராஜாவுக்கு கால் செய்து பேசும்போது அவர் தொடர்ச்சியாக இது தொடர்பாக என்னிடம் பேச வேண்டாம் என்று இரண்டு மூன்று முறை வந்து ரிஜெக்ட் செய்துள்ளார். அதன் பிறகு அவருக்கு மிரட்டலும் விடுக்கிறார் திருநாவுக்கரசு.

அதன் பிறகு நரேஷுக்கும் திருநாகரசுக்குமே அந்த நட்சத்திர ஹோட்டலில் மோதல் ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகுதான் லேசாக இந்த விஷயம் வெளியே வர ஆரம்பித்தது. இதில் முக்கியமாக பார்க்க வேண்டும் என்றால் திருநாகரசு, நரேஷிடம் இருக்கக்கூடிய பணத்தை எப்படியாவது சுருட்டிவிட்டு செல்ல வேண்டும் என்றுதான் அவருடைய எண்ணமாக இருந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ச்சியாக நரேஷிடமிருந்து அதிக தொகையை சுருட்டிவிட்டு அதன் பிறகு இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்பதுதான் திருநாவுக்கரசருடைய ஐடியாவாக இருந்ததாக வாக்குமூலத்தில் சொன்னதாக காவல்துறை தரப்பில கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் திருநாவுக்கரசை காவல் துறையினர் எப்போது மடக்கினார்களோ அன்று வேறு ஒரு கம்பெனியில் ஸ்ட்ரேட்டஜிஸ்ட் பணிக்கு சேர்வதற்கும் தயாராக இருந்திருக்கிறார். அந்த எஸ்எம்எஸ்களுமே போலீசார் மெசேஜ்களை திருநாவுக்கரசுடைய மொபைலில் இருந்து எடுத்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி முக்கியமா திருநாவுக்கரசு நரேஷிடம் இருந்த பணத்தை எப்படியாவது சுருட்ட வேண்டும் என்பதுதான் அவருடைய மெயின் போக்கஸ் இருந்திருக்கிறது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க  தலைமைச் செயலகத்திலேயே இப்படியா? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கையால் கிளம்பிய சர்ச்சை!

திருநாவுக்கரசை அறிமுகம் செய்தது நரேஷ்தான். ஆனால் அசோகுமார் தான் இவர்களுக்கு அசைன்மென்ட் கொடுத்து. இந்த நாசவேலையில் ஈடுபட வைத்ததும், இந்த ஆட்சி கவிழ்ப்பு எம்எல்ஏக்களை பர்சேஸ் பண்ணக்கூடிய சதியை தீட்டியதும் திருநாவுக்கரசும், நரேஷும் தான். அதன் காரணமாகவே திருநாவுக்கரசு, நரேஷ் மட்டுமில்லாமல் அவருக்கு அசைன்மென்ட் கொடுத்த அசோக் குமார், திருநாவுக்கரசு மூலமாக தியாகராஜன் என தற்போது யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லாருமே செல்வன் ஸ்ரீனிவாசன், ராஜேஷ் இவர்கள் அனைவருமே தியாகராஜம்னுடன் இருந்தவர்கள்.

முக்கியமாக அசோக் குமார் கிண்டியில் இருக்கக்கூடிய அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு வந்த உடனே அங்கே மீட்டிங் முடித்து விட்டு இனி நரேஷ், திருநாவுக்கரசிடமும் இனிமேல் இது சம்பந்தமாக நான் பேச மாட்டேன். ரமேஷும், கார்த்தியும் தான் இனிமேல் இது சம்பந்தமாக உங்களிடம் பேசுவார்கள் எனச்சொல்லிவிட்டு அங்கே அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்களை மட்டுமே இனி தொடர்புகொள்ளலாம். என்னை நீங்கள் இனி தொடர்பு கொள்ள வேண்டாம்.

நீங்கள் என்ன பேசினாலும் என்ன கம்யூனிகேட் செய்வதாக இருந்தாலும் ரமேஷ்,கார்த்தியிடம் பேசிக் கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு தொடர்ச்சியாக திருநாவுக்கரசு, நரேஷ், அதிபன், கார்த்திக், ரமேஷ் எல்லாருமே தொடர்ச்சியாக பேசி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேசிய போன் கால்கள் அனைத்தையும் போலீஸ் அனலைஸ் பண்ணி எடுத்துவிட்டார்கள். அது மட்டுமில்லாமல் முக்கியமாக திருநாவுக்கரசுடைய குறிக்கோளே நரேஷிடம் இருந்த பணத்தை அவரிடம் இருந்து எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆவதுதான் அவருடைய மெயின் போகஸ் ஆக இருந்திருக்கிறது.

இதையும் படியுங்க  இந்து அல்லாதவர்களுக்கும் கோவில் அறங்காவலர் பதவி..! திமுக ஆட்களுக்கே மீண்டும் பொறுப்பு… தவெகவின் கபட நாடகம்..!

தற்போது இப்போ கிட்டத்தட்ட ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக அசோக் குமாரை கைது செய்தால்தான் அவருக்கு அசைன்மென்ட் கொடுத்தது யார்? என்று தெரியவரும். அதன் காரணமாக அசோக் குமாரை தேடுவதற்கு தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டிருக்கிறது. போலீசார் தொடர்ச்சியாக அவரை தேடி வருகின்றனர். சம்மன் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று இப்போது இரண்டாவது முறையாகவும் சம்மன் கொடுக்க இருக்கிறார்கள்.

அது மட்டுமின்றி சென்னை விமான நிலையத்திலும் பேசி அலெர்ட் செய்து இருக்கிறார்கள் திருவல்லிக்கேணி போலீஸார். ஆனால் தற்போது வரை அவர் வெளிநாடுற்கு தப்பிச் செல்லவில்லை. தமிழகத்தில்தான் எங்கேயோ ஒரு இடத்தில அவர் பதுங்கி இருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. விரைவில் அசோக் குமாரை கைது செய்து அவரிடம் இருக்கக்கூடிய தகவல்களை பெற்றுக்கொண்டு அதன் பிறகு இவருக்கு அசைன்மென்ட் கொடுத்தது யார்? என்று தெரிந்து கொண்டு அவர்களையும் கைது செய்யக்கூடிய நடவடிக்கையில் காவல்துறை ஈடுபடும்.

அதுமட்டுமில்லாமல் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜிக்கும், அவருடைய சகோதரர் அசோக் குமாருக்கும் சம்மன் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் காவல்துறை தயாராகிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் அசோக் குமாரை விரைவில் கைது செய்து அவரிடம் இருக்கும் வாக்குமூலத்தை பெற்று அதன் பிறகு வேறு யார் இருக்கிறார்கள் என அவர் கை காட்டுறாரோ? அவர் சொல்றாரோ? அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபடும் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago