Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில் கூட அவரது மனைவி சங்கீதாவும், அவர்களின் இரு குழந்தைகளும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், இருவரும் மீண்டும் ஒரே மேடையில் தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் மற்றும் சங்கீதாவின் மகன் ஜேசன் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற ஜூலை 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு ஈரானுக்கு கொடூரமாக இருக்கும்..! டிரம்ப் மரண எச்சரிக்கை.. பற்றி எரியப் போகும் மத்திய கிழக்கு!

இந்த விழாவில் சங்கீதா பங்கேற்பது உறுதியாகியுள்ளது. மேலும், தமிழக முதல்வர் விஜயும் இதில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் பல நட்சத்திர தம்பதிகள் விவாகரத்துக்குப் பிறகும், தங்களின் குழந்தைகளின் நலனுக்காகவும் முக்கிய நிகழ்வுகளுக்காகவும் ஒன்றாக கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், விஜய் மற்றும் சங்கீதாவும் இந்த விழாவில் ஒரே மேடையில் தோன்றினாலும் அதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.

“வழுக்கி விழுந்தார் என நாடகம்.. பிரேத பரிசோதனையில் சிக்கிய மனைவி: சாத்தூர் கத்திக்குத்து கொலையின் பின்னணி!”

இந்த தகவல் சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் பலரும், “அப்படி ஒரு தருணம் நடந்தால், அது எங்கள் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருக்கும்” என்று தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இருப்பினும், குடும்பச் சச்சரவுகளை பின்னுக்குத் தள்ளி விஜய் மற்றும் சங்கீதா இருவரும் உண்மையிலேயே ஒரே மேடையில் பங்கேற்பார்களா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருந்து பார்க்க வேண்டிய விஷயமாகவே உள்ளது.

‘லவ் பண்ணலைனா சாவுடி..!’ நடுரோட்டில் பெண் கழுத்தறுத்த சைக்கோ..! சிங்கப்பெண் படை எங்கே..?

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago