சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசும் உதயநிதி ஸ்டாலினையும், சட்டமன்றத்தில் கிறிஸ்தவ பைபிளை பிரச்சாரம் செய்யும் சபாநாயகரையும், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக பொது இடமான சட்டமன்றத்தில் சனாதனத்தை வேரறுப்போம் என்று கூறிய மதுரை சட்டமன்ற உறுப்பினர் செயலையும் வன்மையாக கண்டிப்பதாக இந்து மகா சபா கூறியுள்ளது.
அகில பாரத இந்து மகாசபா தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. தேனி மாவட்ட தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில இளைஞரணி தலைவர் வல்லபாய் பாலா, மண்டல அமைப்பாளர் லெனின், மாவட்ட செயலாளர் முரளி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா மாநிலத் தலைவர் தா.பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூட்டத்தில் இந்துக்கள் எப்படி செயல்பட வேண்டும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆலோசனை கூடத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் தா.சுப்பிரமணியன், ”வரக்கூடிய காலகட்டத்தில் இந்து எழுச்சியை உருவாக்குவதற்காக ஒற்றுமையாக பணி செய்ய வேண்டும்.
இந்து தர்மத்தை சொல்லிக் கொடுக்கக்கூடிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசும் உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும். சட்டமன்றத்தில் அனைத்து மதங்களையும் ஒரேபார்வையில் பார்க்கும் நிலை உருவாக்கவேண்டும். பொதுஇடமான சட்டமன்றத்தில் கிறிஸ்தவ பைபிளை பிரச்சாரம் செய்யும் வகையில் உள்ள சபாநாயகரையும், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக சனாதனத்தை வேரறுப்போம் என்று கூறிய மதுரை சட்டமன்ற உறுப்பினர் செயலையும் இந்து மகா சபா வன்மையாக கண்டிக்கிறது. தமிழக முதல்வர் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
குதிரை பேரம் என்று புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் இதுகுறித்து புகார்கூறி கவர்னரை பார்க்கிறார்கள். வெற்றி பெறுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறார்கள். ஒரு வாக்காளருக்கு 2000 ரூபாய் கொடுக்கும் கட்சிகள்தான் வெற்றி பெறுகிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுத்தால் குதிரை பேரம் அல்ல . வெற்றி பெற்றவர்களுக்கு பணம் கொடுத்தால் குதிரை பேரம் என்கிறார்கள். வாங்குவதற்கு ஆள் இருக்கும்போது கொடுப்பதற்கு ஆட்கள் வருவார்கள்.
குதிரை பேரத்திற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியது இல்லை. தற்போது ராஜினாமா செய்யும் சட்டமன்ற உறுப்பினரை தொகுதி மக்கள் கேள்வி கேட்கும் நிலை உருவாக வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் அது மாதிரி எதுவும் இல்லை.
ராமர் கோவில் மூன்று லட்சம் ராமபக்தர்கள் பலியாகி, 77 முறை போராடி, பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் நன்கொடை வசூலில் முறைகேடு என்ற புகார் வேதனை அளிக்கிறது. ராமர் கோவில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மகாசபா கோரிக்கை வைக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில்களிலும் தங்கத்தை காணவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. சனாதனம் அழிந்து கொண்டிருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. யார் காக்க வேண்டுமோ அவர்களே திருடுவது அவமானமாக உள்ளது.
பத்திரிக்கை செய்தியில் பத்ரிநாத்திலும் ஊழல் என்று சொல்கிறார்கள். அரசாங்கம் ஒருபுறம் கோயில்களை எடுத்துக் கொண்டு செல்கிறது. அரசாங்கம் கையில் உள்ள கோயில்கள் மக்கள் கையில் வரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
ஆளுநருக்கு எந்த தவறையும் கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறது. தவெக கட்சியைச் சார்ந்த இளைஞர்கள் பள்ளிக்கூடத்தில் ஆராய்ச்சி செய்கிறார்கள். மருத்துவமனையில் ஆய்வு செய்கிறார்கள். அதெல்லாம் யாருக்கும் தெரியாது. மதுரை கூட்டத்தில் வைகை அனை தூர்வாரவேண்டும் என்று கவர்னர் கூறியது சரியானது. தூர்வாறினால்தான் மக்களது வாழ்வாதாரம் பெருகும். கவர்னரின் செயல் பாராட்டத்தக்கது. கவர்னரை அரசு அதிகாரிகள் பார்க்க கூடாது என்று தமிழக அரசு கூறுவது தவறு.
இபிஎஸ்ஸுக்கு ‘லெட்டர்’ செக்… தவெக-விடம் ‘அல்வா’ பேக்… பாஜக-வுக்கு தாவும் எஸ்.பி.வேலுமணி..?
அறநிலையத்துறை அறம் சார்ந்த துறையாக இல்லை அவர்களிடம் தர்மம் இல்லை. 3000 கிலோ தங்கத்தை உருக்கிய முந்தைய அறநிலையத்துறை அமைச்சரை கணக்கு கேட்க மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். 1500 ஆண்டுகள் பழமையான ராஜதானி மீனாட்சி அம்மன் கோவிலை சரி செய்ய வேண்டும். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் எல்லா கோயில்களும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அங்கு கோயில்களுக்கு பாதுகாப்பு குழு பராமரிப்பு குழு போடப்பட்டுள்ளது. தமிழக அரசு அதை செய்யாது.
கோயில்களின் சொத்துக்களை கபளீகரம் செய்ய தமிழக அரசும், அறநிலையத்துறை அதிகாரிகளும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால் இந்துக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். சரியான ஆட்சி மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் திருடர்களாக இருக்கிறார்கள். பழமையான ஆலயங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
அந்தந்தப் பகுதி ஆலயங்களை ஆன்மீகத்தை வளர்க்க இந்துக்கள் முன்வர வேண்டும். அதற்கான போராட்டத்தை இந்து மகா சபா முன்னெடுக்கும்” என்றார்.
-த. முத்துவெளியப்பன், தேனி, சிறப்பு நிருபர்
