தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் வேளை, தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார். தவெக 103 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், விஜய்யின் அரசியல் நகர்வுகள் இப்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, அங்கு நடிகை த்ரிஷாவை நிறுத்தப்போவதாக கசிந்துள்ள தகவல்கள் குறலை ஏற்படுத்தி உள்ளன.

மக்களை ஏமாற்றும் இரு தொகுதி போட்டி!
மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை விட, தன் வெற்றி மீதான பயமே விஜய்யை இரு தொகுதிகளில் போட்டியிட வைத்தது. இப்போது பெரம்பூர் – திருச்சி கிழக்கு இரண்டிலும் முன்னிலையில் இருக்கும் அவர், சட்டப்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்தே ஆகவேண்டும். திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வாக்களித்த அந்தத் தொகுதி மக்களை அவர் வெறும் பகடைக்காய்களாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதே உண்மை. மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு, ராஜினாமா செய்வது வாக்காளர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் இல்லையா?

த்ரிஷாவின் என்ட்ரி..!
திமுகவின் குடும்ப அரசியலை விமர்சித்தே விஜய் அரசியல் களத்திற்கு வந்தார். ஆனால், இன்று அவர் செய்வது என்ன? தனது சினிமா தோழி த்ரிஷாவிற்குத் தொகுதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிடுவது எந்த விதத்தில் நியாயம்? அரசியலில் நீண்டகாலமாக உழைத்த எத்தனையோ தவெக தொண்டர்கள் இருக்கும்போது, திடீரென விஜய்யின் வீட்டிற்கு வந்து ஆலோசனை நடத்தும் த்ரிஷாவிற்கு ‘சீட்’ வழங்கத் துடிப்பது கட்சிக்குள் இருக்கும் உண்மையான விசுவாசிகளை அவமதிக்கும் செயல். தேர்தல் வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியுடன் விஜய் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கும் போதே த்ரிஷா அங்கு ஆஜராவது, கட்சியின் கொள்கைகளை விடத் தனிப்பட்ட விருப்பங்களுக்கே விஜய் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

மக்கள் வரிப்பணத்தில் விளையாட்டா?
விஜய் ராஜினாமா செய்வதால் திருச்சி கிழக்கில் அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் வரும். ஒரு தனிமனிதனின் அரசியல் ஆசைக்காகவும், தனது சினிமா நட்பு வட்டாரத்தைப் பதவியில் அமர்த்தவும் கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணத்தை இடைத்தேர்தல் மூலம் வீணடிப்பது முறையா? த்ரிஷாவிற்கு அரசியலில் ஆர்வம் இருந்தால், அவர் நேரடியாகத் தேர்தலைச் சந்தித்திருக்கலாமே? அதை விடுத்து, விஜய்யின் வெற்றிப் பலத்தை பயன்படுத்திப் பின்வாசல் வழியாக உள்ளே வரத் துடிப்பது ஏன்? தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களிப்பதாகச் சொல்லப்படும் நிலையில், மீண்டும் ஒரு சினிமா ராஜ்ஜியத்தை கோட்டையில் அமர்த்தப்போகிறோமா என்ற கேள்வி எழுகிறது. விஜய்- த்ரிஷாவின் இந்த அரசியல் விளையாட்டு தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவதற்கு அல்ல, அரசியலை ஒரு பொழுதுபோக்கு கிளப்பாக மாற்றுவதற்கே உதவும் என்பதில் சந்தேகமில்லை.

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *