Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னை பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூரில், பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் மாமனாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், கஸ்தூரிபாய் நகர் பகுதியில், சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 58 வயதான பெருமாள். கைது செய்யப்பட்டுள்ளவர் அவரது 28 வயதான மருமகள் மீனா.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மீனாவின் கணவர் மணிகண்டன் உடல்நலக்குறைவு காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

அதன் பின்னர், பெருமாள் தனது மருமகளான மீனாவிடம் தொடர்ந்து பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாகவும், இதுகுறித்து மீனா காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று நள்ளிரவில், பெருமாள் மீண்டும் மீனாவின் அறைக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த மீனா, வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து பெருமாளின் கழுத்தில் குத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்து உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

இதுகுறித்து சங்கர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மீனாவை கைது செய்துள்ளனர். மேலும், பெருமாளின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமனாரைக் கொலை செய்த இந்தச் சம்பவம், அனகாபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago