Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Thirumavalavan

தவெக ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்றதில் இருந்து, அதன் கூட்டணிக்குள்ளும், எதிர்க்கட்சி வட்டாரத்திலும் நிழல் யுத்தங்கள் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக, திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை மையமாக வைத்து விசிக- தவெக இடையே கடுமையான மோதல்களும், ‘சீட்’ பஞ்சாயத்துகளும் வெடித்துள்ளதாகத் தகவல்கள் பரவி வந்தன. இந்த அரசியல் புயலுக்கு மத்தியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நடத்திய அதிரடி செய்தியாளர் சந்திப்பு, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உற்று நோக்க வைத்துள்ளது.

திருமாவின் அதிரடி யூ-டர்ன்
தவெக அமைச்சரவையில் பவர்ஃபுல் இலாகாக்கள் வேண்டும், உள்ளாட்சித் தேர்தலில் 3 மேயர் சீட்டுகள் வேண்டும், இல்லையென்றால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று விசிக தரப்பு மறைமுக மிரட்டல் விடுத்து வருவதாகக் கிளம்பிய விவாதங்கள் கோட்டை வட்டாரத்தையே உலுக்கின.

ஆனால், தற்போதைய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், அந்த வதந்திகளைத் தவிடு பொடியாக்கும் வகையில் அதிரடியான ‘யூ-டர்ன்’ எடுத்துள்ளார். முதல்வர் விஜய் குறித்து அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் காரசாரமான அரசியல் கணக்குகளும், வியக்க வைக்கும் புகழாரங்களும் மட்டுமே நிறைந்திருந்தன.

இதையும் படியுங்க  காங்கிரஸை கை கழுவிய திமுக..! டெல்லி கூட்டம் புறக்கணிப்பு… ‘இன்டியா’ கூட்டணிக்கு மாபெரும் பின்னடைவு..!

வார்த்தைக்கு வார்த்தை பாராட்டு மழை
பத்திரிகையாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதிலளித்த திருமாவளவன், ஆளுங்கட்சிக்கும் விசிக-வுக்கும் இடையே எந்தவொரு விரிசலும் இல்லை எனவும், முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறன், அண்மையில் டாஸ்மாக் கமிஷன் மாஃபியாவுக்கு எதிராக அவர் எடுத்த 1500 கோடி ரூபாய் சேமிப்பு நடவடிக்கை உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

திரைமறைவு பேரங்கள் நடப்பதாகக் கூறப்படும் விமர்சனங்களை முற்றிலும் மறுத்த அவர், தவெக அரசின் செயல்பாடுகளுக்குத் தங்களின் ஆதரவு தொடர்ந்து உறுதியாக இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

அதிர்ச்சியில் அறிவாலயம்
திமுக கூட்டணியில் இருந்து அண்மையில் வெளியேறிய விசிக, தவெக அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருவது கடந்த கால ஆளுங்கட்சியான திமுக-வுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலினைக் களமிறக்கி, வாரிசு அரசியல் விமர்சனங்களைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றலாம் என்று திமுக சீனியர்கள் குறிப்பாக கே.என். நேரு கணக்கு போட்டு வந்தனர்.

இதையும் படியுங்க  #BREAKING பொன்முடி வழக்கில் மெகா திருப்பம்... பிடிவாரண்ட் விவகாரத்தில் நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு...!

ஆனால், இப்போது திருமாவளவன் முதல்வர் விஜய்யை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து தள்ளியிருப்பது, திமுகவின் திருச்சி கிழக்கு தேர்தல் வியூகத்தையே சிதறடித்துள்ளது. விசிக-வை வளைத்து தவெக ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடலாம் என்று நினைத்த எதிர்க்கட்சிகளின் கணக்கு தவிடுபொடியாகியுள்ளது.

வெளியில் கூட்டணிக்குள் சண்டை என்று புகைச்சல்கள் கிளம்பினாலும், முதல்வர் விஜய்யை உச்சி முகர்ந்து பாராட்டியதன் மூலம், தவெக அரசின் அஸ்திவாரம் இப்போதைக்கு பலமாகவே இருக்கிறது என்பதைத் திருமாவளவன் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார். இந்த பாசமழைக்கு பின்னால் இருக்கும் உண்மையான அரசியல் நகர்வு என்ன என்பது வரும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் முழுமையாக அம்பலமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago