சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ் பெறப்பட்டுள்ள
சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தனிநபர் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், வழக்கு ஜார்ஜ் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜார்ஜ் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரபாண்டியன் முன்னிலையில் பொன்முடி இன்று நேரில் ஆஜராகி, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டைத் திரும்பப் பெறக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தரபாண்டியன், பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டைத் திரும்பப் பெற்று, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
