Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரு அமைச்சர், தனது வலது கையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை அடிப்படையாகக் கொண்டு டாட்டூ (Tattoo) வரைந்து கொண்டு, பள்ளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அமைச்சர், நடிகரும் தற்போதைய முதல்வருமான விஜய் அவர்கள் ‘சர்க்கார்’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற புகழ்பெற்ற காட்சியை தனது கையில் டாட்டூவாக குத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த டாட்டூவுடன் அவர் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், அங்கு எடுக்கப்படும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ (Reels) ஆக பதிவிடுவதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மாநில அரசு ஒருபுறம் போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என உறுதியளித்து வரும் நிலையில், பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர் பொதுவெளியிலும், பள்ளி நிகழ்ச்சிகளிலும் சிகரெட் பிடிப்பது போன்ற டாட்டூவை வெளிப்படுத்துவது தவறான முன்மாதிரியாக அமையும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதையும் படியுங்க  விஜய் மீது பாய்கிறது சிபிஐ வழக்கு..? இடியை இறக்கிய அதிமுக எம்.பி..!

இத்தகைய காட்சிகள் பள்ளி மாணவர்கள் மத்தியில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செயலை எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

சட்டமன்றக் கூட்டத்தொடரும் அரசியல் சூழலும் ஏற்கனவே காரசாரமான விவாதங்களால் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக நலன் மற்றும் பள்ளி மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பான இந்த ‘டாட்டூ விவகாரம்’ தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago