Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்திக்கு அனுப்பிய சுருக்கமான மற்றும் முறையான பிறந்தநாள் வாழ்த்து செய்தி, அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலுக்கு மத்தியில், மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் வழக்கமான உணர்வுபூர்வமான வார்த்தைகளைத் தவிர்த்து, மிகவும் சுருக்கமாக வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்த நிலையில், இந்த வாழ்த்துச் செய்தி இணையத்தில் பரவலாக கவனத்தைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் வாழ்த்து செய்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம், கூட்டணியின் தற்போதைய நிலையை பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

கடந்த 2025-ஆம் ஆண்டு, ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த வாழ்த்துச் செய்தியில், அவரை தனது “கொள்கைச் சகோதரர்” என்று குறிப்பிட்டு, மிகவும் நெருக்கமான மற்றும் உணர்வுபூர்வமான வாழ்த்தைப் பகிர்ந்திருந்தார்.

இதையும் படியுங்க  எடப்பாடியின் இருமாப்பு இனி செல்லாது.. காலம் கொடுத்த கடைசி வாய்ப்பு..! திருந்துவாரா இபிஎஸ்..?

ஆனால், இந்த ஆண்டு எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ராகுல் காந்தி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று மிகவும் சுருக்கமாகவும், முறையான பாணியிலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் புதிய அரசுக்கு ஆதரவு தெரிவித்தது.

இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான அரசியல் விமர்சனங்களும் மோதல்களும் நீடித்து வருகின்றன. இந்தச் சூழலில்தான், தூரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த வாழ்த்துச் செய்தி வெளியாகியுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள ராகுல் காந்தி, “வாழ்த்துகளுக்கு நன்றி, திரு. மு.க.ஸ்டாலின். இந்தியாவைக் காப்பதற்கும், நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கும் நம்மிடையே உள்ள பகிரப்பட்ட உறுதிப்பாடு தொடர்ந்து நம்மை வழிநடத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த பதில், தேசிய அரசியல் அளவில் திமுகவுடனான இணக்கமான உறவைத் தொடர விரும்பும் சிக்னலாக அரசியல் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க  "62,000 ரூபாய் EB பில் ஷாக்! வி.ஜே. சித்து வீடியோ… சீறிய ஸ்டாலின்…
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago