Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழக அரசின் 13 லட்சம் கோடி கடன் விவகாரம், தவெக-வின் ஒரு மாத கால ஆட்சி நிர்வாகம், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் திடீர் ராஜினாமா மற்றும் விசிக-விற்குள் நிலவுவதாகக் கூறப்படும் உட்கட்சிப் பூசல்கள் எனப் பல முக்கிய விவகாரங்கள் குறித்து செய்தியாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்தில் வருகை தந்தார். அப்பொழுது அவர் அளித்த பேட்டியில், தமிழுக அரசு நேற்று வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் 10லட்சம் கோடியை தாண்டி 13லட்சம் கோடி கடன் இருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, ” திராவிட முன்னேற்றக் கழகம் தான் பதில் சொல்ல வேண்டும், கருத்து சொல்வதற்கு எனக்கு ஒன்றும் இல்லை”.

ஒரு மாத காலம் தமிழக வெற்றி கழகத்தினுடைய ஆட்சி எப்படி உள்ளது? தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சரியில்லை பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர் என்ற கேள்விக்கு, ”6மாதம் பொறுத்திருப்போம், ஆட்சி குறித்து விமர்சனங்களை வைப்போம் என நிலைப்பாட்டை எதிர்க்கட்சியினர் எடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரே மாதத்தில் ஆட்சி நிர்வாகம் குறித்து எந்த மதிப்பீட்டையும் சொல்ல இயலாது. இப்போது அவர்களுக்கு ஒரு கற்றுக் கொள்ளக்கூடிய காலம். எனவே, ஒரு மாத கால ஆட்சி பற்றி மதிப்பீடு சொல்ல இயலாது”.

இதையும் படியுங்க  தமிழக அரசியலில் புதிய வரலாறு…கோஷமல்ல, அதிகார பகிர்வு… விஜய் அமைச்சரவையில் சமூகநீதி

அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்த கேள்விக்கு, ”அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியவில்லை, இது அவர்களுடைய உட் கட்சி விவகாரம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்த பதவியை ராஜினாமா செய்கிற அளவுக்கு என்ன உள்ளே நெருக்கடி என்பது அவர்களுக்கு தான் தெரியும். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும். அதிமுக ஒரு திராவிட இயக்கம் என்ற முறையில் அந்த கட்சி வலுவாக, சிதறாமல் இருப்பது தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது என்பதை பலமுறை சொல்லி இருக்கிறேன். ஜெயலலிதா, எம்ஜிஆர் அவர்களும் காப்பாற்றிய அதிமுக கட்டுக்கோப்பாக இருந்தால் நல்லது”.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளுநர் ஷானவாஸ் புதிய கட்சி ஆரம்பித்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போகிறார் என வார இதழ் பேட்டி குறித்த கேள்விக்கு, ”அந்த வார இதழுக்கு ஏதோ தனிப்பட்ட உள்நோக்கம் உள்ளது. அது தவறான தகவல். தலைமையோடு தொடர்பில் இருக்கிறார். வெளிநாடு சென்று தற்போது திரும்பி இருக்கிறார். விரைவில் என்னை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு இருக்கிற வருத்தம் அவர் கலந்து பேசி முடிவு எடுக்கவில்லை என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

இதையும் படியுங்க  திரிஷா-வா..? அமுதா-வா..? தவெகவில் அதிகார மையம்..! அலறும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..!

வன்னிஅரசு அமைச்சரான போதும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பதவி ஏற்கும் பொழுது அவர் தாமதமாக வந்த நிலையில் அவருடைய வாகனம் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், திட்டமிட்டு ஒரு வாரேடும் திரும்பத் திரும்ப விடுதலை சிறுத்தை குறிவைத்து அவதூறுகளை பரப்பி வருகின்றன. விடுதலை சிறுத்தைகளை கட்சி எளிய மக்களுக்கான இயக்கம். இந்த இயக்கத்தை உடைத்து இங்கே என்ன சாதிக்கப் போகிறார்கள்? ஏன் இப்படி திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்? என்று விளங்கவில்லை”.

தவெகவில் விசிக அமைச்சர்கள் இடம் பெற்றதில் அவருக்கு விருப்பம் இல்லையா? தேர்தலுக்கு முன்பே தவெகஉடன் கூட்டணி செல்ல வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, ”அந்த மாதிரி எதுவும் சொல்லவில்லை. அந்த நிலைப்பாட்டில் வருத்தமும் இல்லை. கட்சிக்குள் சிலர் வெளிப்படையான விமர்சனங்களை வைக்கிறார்கள் அதை கண்டிக்க வேண்டும் என்பதை என்ற கருத்தை முன் வைக்கிறார்.

விமர்சனங்கள் வைத்த பொறுப்பாளர்களை கடுமையாக கண்டித்து இருக்கிறேன். அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறேன். ஆகவே, இதை வைத்துக்கொண்டு பூதாகரப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டை பாதுகாப்பதற்கு விசிகவை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்த அளவு விசிக தமிழ்நாட்டுக்கு எதிரான காட்சியா என்பது விளங்கவில்லை.

இதையும் படியுங்க  சிறையில் நடந்த கொடூர அனுபவங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி கிளப்பிய அமைச்சர் வன்னி அரசு!

ஒரே ஒரு நாளிதழும், வார ஏடும் தான் திரும்பத் திரும்ப இதை செய்து கொண்டிருக்கின்றனர். கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை”.

வெளிநாடு சென்று வந்த பிறகு உங்களை ஷாநவாஸ் சந்தித்தாரா? என்ற கேள்விக்கு. ”உடனே வந்து சந்திக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எல்லாருக்கும் உரிய சுதந்திரத்தை கொடுக்கிறவன். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலே சுதந்திரமாக தான் செயல்பட்டார்கள். அவர் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago