https://republictn.com/

திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தேர்தல் முடிவுகளுக்கு பின் தவெக கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்தது. இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகியது. இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு திமுக ஆதரவை கோரியுள்ளார் ராகுல் காந்தி.

இது குறித்து திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் குலைத்ததே ராகுல் தானே? என்கிற தலைப்பில் தலையங்க் வெளியிட்டுள்ளது. அதில், ”ஒற்­று­மை­யைப் பற்றி ராகுல் வகுப்பு எடுத்­துள்­ளார். இது காலம் கடந்த ஞானோ­த­யம் ஆகும். இந்த ஒற்­று­மையை ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் கெடுத்­த­வரே ராகுல்­தானே?

இந்­தியா கூட்­ட­ணிக் கட்­சிக் கூட்­டத்­தில் தான் ஆற்­றிய உரையை ராகுல் காந்தி, சில நாட்­கள் கழித்து வெளி­யிட்டு இருக்­கி­றார். ஜூன் 8 ஆம் தேதி நடந்த கூட்­டத்­தில் தான் என்ன பேசி­னேன் என்­பதை ஜூன் 11 ஆம் தேதி வெளி­யிட்டு இருக்­கி­றார் ராகுல். இந்­தியா கூட்­ட­ணிக் கட்­சி­கள் கூட்­டத்­தில் கலந்து கொண்ட கட்­சி­கள், காங்­கி­ரஸ் மீது வைத்­துள்ள குற்­றச்­சாட்­டு­கள் பொது­வெ­ளி­யில் அதி­கம் பர­வி­ய­தால் தனது உரையை வெளி­யிட வேண்டிய நெருக்­கடி ராகு­லுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

எதிர்க்­கட்­சி­க­ளின் ஒற்­று­மை­யைக் குலைக்­கும் வகை­யில் ராகுல் எப்­படி நடந்து கொண்­டார் என்­பதை இட­து­சா­ரி­க­ளும், சமாஜ்­வாடி கட்­சி­யும், ராஷ்டி­ரிய ஜனதா தள­மும் கடு­மை­யான விமர்­ச­னங்­கள் வைத்­துள்­ளன.

மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் ஜான் பிரிட்­டாஸ் ஆற்­றிய உரை மிக முக்­கி­ய­மா­னது. கேர­ளா­வில் காங்­கி­ரஸ் கட்சி­யும், மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யும் எதி­ரெ­தி­ராக போட்­டி­யிட்­டன. இரண்­டும் சம செல்­வாக்கு உள்ள கட்­சி­கள் ஆகும். அவை இரண்­டும் நேருக்கு நேராக மோதி­யதை யாரும் குறை சொல்­ல­வில்லை. ஆனால், ராகுல் காந்தி வைத்த குற்­றச்­சாட்டு அபத்­த­மா­னது. ‘பின­ராயி விஜ­யனை மோடி ஏன் கைது செய்­ய­வில்லை? இரண்டு பேருக்­கும் ரக­சிய ஒப்­பந்­தம் உள்­ளது’ என்று பேசி­னார் ராகுல். இதைத்­தான் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி கடு­மை­யான குற்­றச்­சாட்­டாக வைக்­கி­றது.

‘‘இடது சாரி­க­ளுக்­கும் பா.ஜ.க.வுக்­கும் இடையே ஒரு ரக­சிய உடன்­பாடு இருப்­ப­தாக ராகுல் காந்தி, கேரள மாநில சட்­ட­சபை பரப்­பு­ரை­யின் போது அப்பட்­ட­மான பொய்­க­ளைப் பேசி­னார். இட­து­சா­ரி­க­ளுக்­கும் பா.ஜ.க.வுக்­கும் இடையே ஒரு ஒப்­பந்­தம் இருப்­ப­தா­கப் பேசி­னார். இடது சாரி­க­ளின் பா.ஜ.க. எதிர்ப்பு நிலைப்­பாட்­டுக்கு காங்­கி­ர­ஸி­டம் இருந்து சான்­றி­தழ் தேவை­யில்லை’’என்று ராகுல் முன்­னி­லை­யில் குற்­றம் சாட்­டி­னார் மார்க்­சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்­டாஸ்.

‘‘இட­து­சா­ரி­கள் இப்­போது இட­து­சா­ரி­க­ளாக இல்லை’’ என்று ராகுல் சொன்­ன­தைக் குறிப்­பிட்ட இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் பொதுச்­செ­ய­லா­ளர் டி.ராஜா, ‘இது ராகு­லின் அர­சி­யல் முதிர்ச்­சி­யின்­மை­யைக் காட்­டு­கி­றது’ என்று விமர்­சித்­தார். ‘இல்லை, உண்­மை­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான் நான் அப்­ப­டிச் சொன்­னேன்’ என்று குறிப்­பிட்ட ராகுல், ‘அதா­னியை கேர­ளா­வுக்கு கொண்­டு­வந்­தது இட­து­சாரி அரசே’ என்று வாதிட்­டார். ‘அதா­னியை கேர­ளா­வுக்கு கொண்டு வந்­தது காங்­கி­ரஸ் அரசு தான்’ என்று இட­து­சாரி அமைப்­பி­னர் பதில் அளித்­துள்­ளார்­கள்.

சமாஜ்­வாதி கட்­சித் தலை­வர் அகி­லேஷ் பேசும் போது, ‘‘இந்­தியா கூட்­ட­ணி­யில் இருந்து தி.மு.க. மற்­றும் ஆம் ஆத்மி விலகி இருப்­பது மிகப்­பெ­ரிய பின்­ன­டைவு. இந்­தியா கூட்­டணி இதே வழி­யில் தொடர வேண்­டுமா? என்­பது குறித்து தீவி­ர­மாக ஆராய வேண்­டும்’’என்று அழுத்­தம் திருத்­த­மா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

‘‘பீகார் மாநி­லத்­தில் காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளுக்­கும் பா.ஜ.க. தலை­வர்­க­ளுக்­கும் இடையே பல பிரச்­சி­னை­க­ளில் ரக­சிய உடன்­ப­டிக்­கை­கள் இருந்­தனவா? என்­பது குறித்து எனக்கு சந்­தே­கம் இருக்­கி­றது. இது பற்றி காங்­கிரஸ் தலை­மை­யி­டம் பல­முறை குறிப்­பிட்­டும் நிலை­மை­யைச் சரி செய்ய அவர்­கள் எந்த நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­க­வில்லை’’ என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலை­வர் தேஜஸ்வீ சொல்லி இருக்­கி­றார்.

‘பின­ராயி விஜ­யனை என்­னால் கட்­டி­ய­ணைக்க முடி­யாது’ என்று சொல்லி இருக்­கி­றார் ராகுல். அவர் தான் நாடா­ளு­மன்­றத்­தில் பிர­த­மர் மோடி­யைக் கட்டி அணைத்­த­வர் ஆயிற்றே! அந்­தக் காட்­சியை மறக்க முடி­யுமா?

‘‘யாரும் ராகுல் காந்­தியை பின­ராயி விஜ­யனை கட்­டி­ய­ணைக்­கச் சொல்­ல­வில்லை. மாறாக, பின­ராயி விஜ­யன் மற்­றும் பிற எதிர்க்­கட்­சித் தலை­வர்களைக் கைது செய்­யக் கோரு­வ­தன் மூலம், அவர் அம­லாக்­கத்­து­றைக்­கும், மோடி அர­சுக்­கும் ஒரு உத­வி­யா­ள­ரா­கச் செயல்­ப­டு­வதை நிறுத்த வேண்­டும் என்­று­தான் நாங்­கள் கேட்­கி­றோம். அது எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் வேலை அல்ல” என்று மார்க்­சிஸ்ட் பொதுச்­செ­ய­லா­ளர் பேபி மீண்­டும் குற்­றம் சாட்டி இருக்­கி­றார். இதற்கு ராகு­லின் பதில் என்ன?

தமிழ்­நாட்­டில் நடந்த கதை ஊர­றிந்­தது. தி.மு.க.வுடன் கூட்­டணி வைத்­துக் கொண்டே காங்­கி­ரஸ் செய்த கழுத்­த­றுப்­பு­கள் ராகுல் ஆசீர்­வாதத்­து­டன் செய்­யப்­பட்­ட­வையே. இன்­றைக்கு அவர்­கள் சேர்ந்­துள்ள கட்­சி­யின் தலை­வர், ‘இந்­தியா கூட்­ட­ணிக்­குள் வர மாட்­டேன்’ என்று பெப்பே காட்­டி­ய­தும்தான், ராகுல் காந்தி நல்­ல­பிள்ளை வேஷம் போடு­கிறார். ‘நான் 100 விழுக்­காடு உண்­மை­யாக இருப்­பேன். இப்­போதே தி.மு.க.வுக்கு
உத்­த­ர­வா­தம் தரு­கி­றேன்’ என்­கி­றார் ராகுல்.

சட்­ட­மன்­றத் தேர்­தல் நடக்­கும் மாநி­லங்­க­ளில் எல்­லாம் ‘இந்­தியா’ கூட்­ட­ணிக் கட்­சி­களை ஆட்­சிக்கு வர விடா­மல் தடுக்க எல்லா கீழ்த்­த­ர­மான வேலை­க­ளை­யும் பார்த்து விட்டு, நாடா­ளு­மன்­றத் தேர்­தல் வரும் போது, ‘புலிக்கு பயந்­த­வர்­கள் என் மேலே படுத்­துக் கொள்­ளுங்­கள்’ என்று சொல்­வ­தைப் போல ஆத­ர­வைத் தேடு­வ­தற்கு வெட்­க­மாக இல்­லையா?

தி.மு.க.வை காங்­கி­ரஸ் நடத்­திய விதம் குறித்து அகி­லேஷ், தேஜஸ்வீ, உமர் அப்­துல்லா, தேசி­ய­வாத காங்­கி­ரஸ், விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்சி ஆகி­யவை அனைத்­தும் காங்­கி­ரஸ் கட்சி மீது குற்­றச்­சாட்­டு­களை வைத்­துள்­ளார்­கள். இதனை ராகுல் எதிர்­பார்க்­க­வில்லை. பா.ஜ.க.வை எதிர்ப்­ப­தற்­கா­கக் கூடிய கூட்­டத்­தில் காங்­கி­ரஸ் எதிர்ப்­பு­தான் அதி­க­மாக பேசப்­பட்­டி­ருப்­ப­தற்கு பொறுப்­பேற்க வேண்­டி­யது ராகு­லின்
முதிர்ச்­சி­யின்­மை­யும், நேர்மை யின்­மை­யுமே கார­ணம் ஆகும்.

‘இந்­தியா கூட்­ட­ணிக் கட்­சி­கள் காங்­கி­ரஸ் மீது வைக்­கும் விமர்­ச­னங்­கள் ஏற்­கப்­ப­டும்” என்று ராகுல் சொல்லி இருக்­கி­றார். இவர் இனி விமர்­ச­னங்­களை ஏற்­றால் என்ன? ஏற்­கா­மல் போனால் என்ன? ‘சிவன் விஷத்­தைக் குடித்­த­தைப் போல அனைத்து விமர்­ச­னங்­க­ளை­யும் காங்­கிரஸ் விழுங்­கிக் கொள்ள வேண்­டும்’ என்­கி­றார் ராகுல்.

அவர் சொல்­லும் புரா­ணக் கதைப்­ப­டியே பார்த்­தா­லும் விஷத்தை சிவன் உரு­வாக்­க­வில்லை. தேவர்­க­ளும், அசு­ரர்­க­ளும்­தான் உரு­வாக்­கி­னார்­கள். அமு­தம் வேண்டி பாற்­க­ட­லைக் கடைந்த போது விஷம் வந்­தது. அதனை சிவ­பெ­ரு­மான் குடித்­தார். ஆனால் ‘இந்­தி­யா’க் கூட்­ட­ணிக்­குள் அமு­த­மாக இல்­லா­மல் விஷத்­தையே கடைந்­தது யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 hours ago at 4 hours ago