Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சமாதான உடன்பாடு விரைவில் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உடன்பாடு எந்த இடத்தில், எந்த நேரத்தில் கையெழுத்தாகும் என்பது குறித்து பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அணுசக்தி ஆராய்ச்சிக்கு தடை விதிப்பது இந்த சமாதான உடன்பாட்டின் ஒரு பகுதியாக இல்லை என்பதை ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. ஈரான் தனது அணு திட்டங்களை கைவிட வேண்டும் என்று ஆரம்பம் முதலே அமெரிக்கா வலியுறுத்தி வந்த நிலையில், அந்த விவகாரம் தற்போதைய சமாதான ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

மேலும், ஈரானுடன் சமாதான உடன்பாடு கையெழுத்தாகும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உடன்பாடு கையெழுத்தாகும் சூழல் நெருங்கியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறைந்து வருவதாகவும், மோதல் சூழல் முடிவுக்கு வரக்கூடும் என்றும் அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வந்த பதற்றம் உலக பொருளாதாரத்திலும், சர்வதேச அரசியல் சூழலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகள் முக்கிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "24 மணிநேரத்தில் 3,00,000 மின்னல்கள்! மிரண்டுபோன மக்கள்.. நெதர்லாந்தில் நடந்த விசித்திர பிரளயம்

மேலும், மீதமுள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அடுத்த 60 நாட்களுக்குள் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அணுசக்தி ஆராய்ச்சிக்கான தடை இந்த சமாதான உடன்பாட்டில் இடம்பெறவில்லை என்பதை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சமாதான உடன்பாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், வரவிருக்கும் நாட்களில் அது அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிராந்தியத்தில் நிலவி வந்த பதற்றம் குறைவதோடு, கடல் மார்க்க கப்பல் போக்குவரத்தும் தடையின்றி நடைபெறும் சூழல் உருவாகலாம் என சர்வதேச வட்டாரங்கள் கருதுகின்றன.

மீதமுள்ள பிரச்சினைகள் குறித்தும் அடுத்த 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இரு நாடுகளும் உறுதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago