Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, மிக இளம் வயதில் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற 29 வயதேயான கீர்த்தனா அவர்கள் மீது ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களும், எதிர்பார்ப்புகளும் எழுந்தன. “ரீல்ஸ்” மூலம் முதலீட்டாளர்களை அழைத்தது மற்றும் சில முக்கிய நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றது போன்ற விவகாரங்களால் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு அவர் உள்ளானார்.

ஆனால், தன் மீதான விமர்சனங்களுக்குத் தனது உழைப்பின் மூலமே பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழகத்திற்கான பிரம்மாண்ட தொழில் முதலீடுகளை உறுதி செய்ய அமைச்சர் கீர்த்தனா தற்போது களமிறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, முந்தைய தி.மு.க ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடியில் ரூ.40,000 கோடி மதிப்பில் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஒப்பந்தம் செய்திருந்த தென்கொரியாவின் ‘ஹெச்டி ஹூண்டாய்’ நிறுவனத்திற்கு அவரே நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதை உறுதி செய்யும் விதமாக, தென்கொரியாவின் ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையை அமைச்சர் கீர்த்தனா நேர்மறையாக முன்னெடுத்துள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சியமைந்த பிறகு, தொழில்துறை அமைச்சராக 29 வயதேயான இளம்பெண் கீர்த்தனா பொறுப்பேற்றுக் கொண்டார். மிக இளம் வயதில் அமைச்சரான இவர் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பும், கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்தது. ரீல்ஸ் மூலம் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தமிழகத்தில் முதலீடு செய்வதாக இருந்த நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்றதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதையும் படியுங்க  அந்த இருவரை ஓரம்கட்டிய தவெக..! ஆட்சியைப் பிடிக்க விஜய் களத்தில் இறக்கிய 'நிர்மல்' அஸ்திரம்..!

இந்த சூழலில், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்த தென்கொரிய நிறுவனத்திற்கு நேரில் சென்றார். இந்த நிறுவனம் முந்தைய திமுக ஆட்சியில், முதலீடு செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. முதலீட்டை மீண்டும் ஒருமுறை உறுதி செய்வதே அமைச்சர் கீர்த்தனாவின் நோக்கம். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டும் நிறுவனமாக அறியப்படும் ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்துக்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் கீர்த்தனா.

தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், உங்கள் தொழில் முதலீட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று அந்த நிறுவனத்துக்கு உறுதி அளித்தார். இதனால் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படுவது உறுதி ஆகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அண்மையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்க  அமித்ஷாவின் அண்ணாமலை பாசம்: தமிழக பாஜக-வுக்கு 3 மாதக் கெடு… நயினாருக்கு புது அசைன்மெண்ட்!

சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் வாசிக்க, எங்களுடன் வாட்ஸ் அப் சேனலில் தொடர இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் https://www.whatsapp.com/channel/0029VbCLl4wAzNbnK5JVXq3s

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago