https://republictn.com/

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் 648 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) எனப்படும் அமைப்பு, நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கர்நாடக முதலமைச்சராக நேற்று பதவியேற்ற டி. கே. சிவகுமார், 1413 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தியாவின் மிகப் பணக்கார முதலமைச்சராக முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 931 கோடி ரூபாய் சொத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 648 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேலும், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு 332 கோடி ரூபாய் சொத்துடன் நான்காவது இடத்தில் உள்ளார். நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியூ ரியோ 46 கோடி ரூபாய் சொத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் 42 கோடி ரூபாய் சொத்தும், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 38 கோடி ரூபாய் சொத்தும் கொண்டுள்ளனர். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி 30 கோடி ரூபாய் சொத்துடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் 25 கோடி ரூபாய் சொத்துடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா 17 கோடி ரூபாய் சொத்துடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago