Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர் சி தம்பதியரின் மூத்த மகள் அவந்திகாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து, அண்மையில் குடும்பத்துடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த குஷ்பு, திருமணத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்த அவர், “எங்கள் வருங்கால மாப்பிள்ளை ஸ்ரவன் சீனிவாசன்” எனவும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் ஸ்ரவன் யார்? அவர் என்ன செய்கிறார்? இது காதல் திருமணமா? என்பது குறித்து தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், ஸ்ரவன் சீனிவாசன் குறித்து குஷ்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அதில், அவந்திகா மற்றும் ஸ்ரவன் இடையே காதல் ஏற்பட்டதாகவும், இரு குடும்பங்களும் அதனை ஏற்றுக்கொண்டு திருமணத்தை நடத்தி வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் ஸ்ரவன் சீனிவாசன் என்றும், அவர் மெர்ச்சன்ட் நேவி அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பிறகும் அவந்திகா தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  "சம்பளத்தில் பாரபட்சம்.. உழைப்பில் சமத்துவம்! - காஜல் அகர்வாலின் ஆவேசப் பேச்சு!"

விரைவில் திருமண தேதி குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாளத் திரைப்படமான “ஆரம்பம்” மூலம் சினிமாவில் அறிமுகமான அவந்திகா, விரைவில் தமிழ் படங்களிலும் நடிப்பார் என கூறப்படுகிறது.

மேலும், அவந்திகாவின் தங்கை அனந்திகா சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago