Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

குரு பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு குரு பெயர்ந்ததை முன்னிட்டு, மயிலாடுதுறையில் உள்ள பதானேஸ்வரர் ஆலயத்தில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, கங்கா கவசம் சாற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள குருவித்துறையில் அமைந்துள்ள சித்திரரத வல்லப பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள குருபகவான் சன்னிதியில் குரு பெயர்ச்சி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் யோககுரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் புளியறையில் உள்ள தட்சிணாமூர்த்தி திருக்கோவிலில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago