https://republictn.com/

‘பத்து தோல்வி பழனிசாமி என சொன்னார்கள், ஆனால் ஸ்டாலின் இன்று படுதோல்வி அடைந்திருக்கிறார்” என அதிமுகா முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர், ”திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக தலைவர் நயினார் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பத்து தோல்வி பழனிசாமி என சொன்னார்கள், ஆனால் இன்று படுதோல்வி அடைந்திருக்கிறார்கள்.

இபிஎஸ் எடுக்கும் முடிவிற்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கட்டுப்படுவர். பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ்-க்கு ஆதரவாக கடிதம் அளித்துள்ளனர்; தனது சுயநலத்திற்காக அதிமுகவை அழிக்கிறார் சி.வி.சண்முகம். சி.வி.சண்முகம் ராஜினாமாவால் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.கவிற்கு அங்கீகாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. 2021ல் தோல்வியை சந்தித்த சி.வி.சண்முகம், வற்புறுத்திக் கேட்டதால் அவரை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கினார் எடப்பாடி பழனிசாமி.

பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கடிதம் அளித்துள்ளனர். பிஎஸ் மீது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவிற்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கட்டுப்படுவர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகள் இனிமேல் ‘போர்வாள்’ என்ற நாளிதழ் மூலம் வெளியாகும். சி.வி.சண்முகம் தன்மீதான தவறை மறைக்க எடப்பாடியார் மீது குற்றம்சாட்டுகிறார். அதிமுக தோல்வியடைய சி.வி.சண்முகம்தான் காரணம். அதிமுக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல.

சி.வி.சண்முகம் ஜெயலலிதாவால் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்; அவருக்கு மீண்டும் பதவியை அளித்தவர் இபிஎஸ் சட்டமன்ற தேர்தலில் தோற்ற சி.வி.சண்முகத்தை மாநிலங்களவை எம்.பி. ஆக்கியவர் இபிஎஸ்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 days ago at 7 days ago