panaiyur

தீபாவளி கொண்டாட்டம் முடிந்து, இன்னும் பட்டாசு வாசனை கூட அடங்காத நிலையில், தவெக வட்டாரத்தில் திடீரென பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம். வீட்டில் குடும்பத்தோடு தீபாவளி விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த எம்.எல்.ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கும் தவெக தலைமையிலிருந்து ஒரு போன் வந்திருக்கிறது.

“நாளை காலை நவம்பர் 11-ம் தேதி அத்தனை பேரும் சென்னையில் இருக்க வேண்டும். முகாமிட்டிருக்க வேண்டும். கூட்டத்திற்கான நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.”

இவ்வளவுதான் செய்தி. காரணம் என்ன? எதற்காக கூட்டம்? என்ன பேசப் போகிறார் தலைவர்? எதுவுமே சொல்லப்படவில்லை.

தலைமையிலிருந்து காரணம் சொல்லாமல் திடீரென அழைப்பு வந்ததால், எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் போன் போட்டு, “உனக்கு என்ன தகவல் வந்துச்சு? உனக்கு ஏதாச்சும் தெரியுமா?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக பனையூர் நெருங்கிய வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.

“கடந்த மே 13-ம் தேதி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறோம். அதற்கு அடுத்து, அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நவம்பர் 13-ம் தேதிக்கு மேல்தான் கொண்டு வர முடியும். அந்த தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்க  "சொந்தக் கட்சியிலேயே கைவைத்த லஞ்சப் பூதம்! அதிரடியில் இறங்குவாரா CM விஜய்? மாம்பாக்கம் வீடியோ அதிர்ச்சி!"

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்குத் திட்டமிட்டு, எங்களின் எம்.எல்.ஏக்களைத் தூக்க எதிர்க்கட்சிகள் திட்டம் போட்டு வருகின்றனர் என்று தலைமைக்குத் தகவல் வந்திருக்கிறது. அதனால் எம்.எல்.ஏக்களை நேரில் சந்தித்து, தலைவரே சில ஆலோசனைகளை பெர்சனலாக வழங்கவிருக்கிறார்” என்றனர்.

அது மட்டுமல்ல, இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறதாம்.

சமீபத்தில் சில எம்.எல்.ஏக்களின் செயல்பாடு கடும் விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறது. அது முதல்வர் விஜய்யை கடுமையாக அப்செட் ஆக்கியிருக்கிறதாம்.

குறிப்பாக, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் மற்றும் துணை சபாநாயகர் தாக்குதல் விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏக்களுக்குக் கடுமையான அறிவுரைகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை வழங்கவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர்.

ஆக, நாளைய கூட்டம் வெறும் ஆலோசனைக் கூட்டம் மட்டுமல்ல. எம்.எல்.ஏக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. ஒழுங்கு நடவடிக்கைக்கான களம். நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள ரெடியாக இருங்கள் என்ற அதிரடி உத்தரவு.

நாளை சென்னையில் என்ன நடக்கப் போகிறது? யாருக்கு டோஸ் விழப் போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படியுங்க  என் தியாகம்... அரக்கனிடமிருந்து காப்பாற்றும்!" - கல்லூரி வளாகத்தில் நிர்வாகி மர்ம மரணம் ? அதிரவைக்கும் ஆங்கிலக் கடிதம் ? 
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *