Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

முதல்வர் விஜய் ஆட்சியை அகற்ற அனைத்து வகையிலும் திமுக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பலருக்கும் தெரியாத ஆடுபுலி ஆட்டம் தவெக மற்றும் திமுக இடையே நடந்து வருகிறது. இந்த சூழலில் தான் அன்பில் மகேஷை கைது செய்து செக் வைத்திருக்கிறது விஜய் அரசு. ஏன் திருச்சியை சேர்ந்தவர்கள் குறிவைக்க காரணம் என்று விசாரித்த போதுதான் பல உண்மை நம்மை ஆச்சரியம் அடையச் செய்திருக்கிறது.

தவெக அரசுக்கு ஆதரவை இடதுசாரிகள் வழங்கி இருந்தாலும் அவர்கள் சொந்த விருப்பத்தின் பெயரில் விஜய் முதல்வராக வர ஆதரவு கொடுக்கவில்லை, வேறு வழியில்லாமல் கொடுத்ததாக அவர்களே பல இடங்களில் கூறியிருக்கிறார்கள். திருமாவளவன் தொடர்ந்து விஜய் அரசிற்கு எதிராக பல நேரங்களில் பேசி வருகிறார். அதே நேரம் திமுகவிற்கான ஆதரவு நிலைப்பாட்டையும் எடுக்கிறார். தவெக கூட்டணிக்குள் பாமக வந்தால் வெளியில் சென்று விடுவோம் எனவும் எச்சரிக்கை கொடுத்து வருகிறார். இந்த சூழலில் தான் திமுக எப்படியாவது தவெக கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவை பிரிக்க காய்களை நகர்த்தியது.

இதையும் படியுங்க  வேலைக்கும் வேட்டு வச்சாச்சு! அதிர்ச்சியில் கிராமப்புற மக்கள்! தமிழகத்திற்குப் பேரிடியை இறக்கிய மத்திய அரசு!
Thirumavalavan

அதில் 70% முன்னேற்றம் இருக்கிறதாம். ஆனால் இவை அனைத்தையும் தாண்டி தவெகவில் பொருளாதார பின்னணி இல்லாத எம்எல்ஏக்கள் பலருக்கு அவர்கள் வாழ்விலும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு டீல் பேசப்பட்டிருக்கிறது. திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 10 பேருக்கு தலா இருவரை தங்கள் பக்கம் கொண்டுவர பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் செந்தில் பாலாஜியை தொடர்ந்து அன்பில் மகேஷ் மற்றும் கே.என்.நேரு ஆகியோர் தீவிரமாக செயல்பட்டிருக்கிறார்கள்.

இருவர் தரப்பிலும் சில வாக்குறுதிகள் கைமாறி இருக்கிறதாம். இந்த தகவல் உளவுத்துறை கவனத்திற்கு செல்ல அன்றே, தீவிர நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது ஆளும் அரசு. நாங்கள் என்ன எடப்பாடியா வேடிக்கை பார்க்க? இனி எங்க ஆட்டத்தை பாருங்கள் என களத்தில் இறங்கி அன்பில் மகேஷை முதலாவதாக கைது செய்து உள்ளே தூக்கி வைத்து சப்பாத்தி சாப்பிட வைத்திருக்கிறது. இனி வரும் நாட்களில் தீவிரமாக திமுகவிற்கு எதிராக சாட்டையை சுழற்ற இருக்கிறதாம் தவெக.

Anbil makesh

அதே நேரத்தில் திருமாவையும், கம்யூனிஸ்ட் கட்சிகளையும் நம்ப முடியாது என்பதால் விரைவில் அதிமுகவில் இருந்து பலரை மூன்றாம் கட்டமாக ராஜினாமா செய்ய வைத்து அவர்களை தவெகவில் இணைக்கவும் பிளான் பி தயாராக இருக்கிறதாம். தவெக பெரும்பான்மை பெறாதவரை உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வாய்ப்புகள் இல்லை என்றும், எப்போது விஜய் அரசு தனி பெரும்பான்மை பெறுகிறதோ அன்று உதயநிதி ஸ்டாலினை நிச்சயம் கைது செய்வார்கள் எனவும் பழைய பனையூர் கணக்கு ஒன்று மிச்சம் இருக்கிறதாம் என்கின்றனர் அந்த பணையூர் ரகசியம் அறிந்தவர்கள்.

இதையும் படியுங்க  தலைகீழாக நடக்கப்போகும் மாற்றம்..! முதல்வர் விஜய்யின் மாஸ் வியூகம்..! இனி அதிமுக- திமுக அவ்வளவுதானா..?
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 hours ago at 4 hours ago