Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Anbumani Ramadoss

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளிப்பட்டு ஆறுமுகம், விக்ரவாண்டி கைப்புள்ள ராஜு ஆகிய இரண்டு பாமக புள்ளிகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் அதிபயங்கர மோதல் வெடிக்கலாம் என்பதுதான் அங்கிருந்து கிடைத்திருக்கும் அதிர்ச்சி தகவல்.

அதாவது கள்ளிப்பட்டு ஆறுமுகம் என்பவர் மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்தார். சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில இணைந்தார். அன்புமணியோட தம்பிகள் என்கிற அடைமொழியோடு கள்ளிப்பட்டு ஆறுமுகம் பாமக-வில் கெத்தாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இதே மாதிரி விழுப்புரம் மாவட்டம் விக்ரபாண்டியை சேர்ந்த கைப்புள்ள ராஜு என்பவர் ஏற்கனவே திமுகவின் மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக இருந்து பாமகவுக்கு வந்தவர். இந்த இருவேறு கட்சிகளில் இருந்து பாமகவுக்கு வந்த இந்த இரண்டு பேருக்கும் இடையில் அவ்வப்போது பயங்கர உரசல்கள் ஏற்பட்டு வருகிறது.

anbumani

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி வன்னிய சங்கம் நடத்திய தியாகிகள் தினத்துக்காக கள்ளிப்பட்டு ஆறுமுகம் சுமார் 100 கார்களில் விக்ரவாண்டியை கிராஸ் பண்ணி செம்ம கெத்தா போய்க்கொண்டு இருந்தார். அப்போது விக்ரவாண்டியை சேர்ந்த கைப்புள்ள ராஜுவோட ஆதரவாளர்களுக்கும், ஆறுமுகம் ஆதரவாளர்களுக்கும் இடையில ஒரு மிகப்பெரிய சண்டை வந்தது. கள்ளிப்பட்டு ஆறுமுகத்தின் பின்னால் அணிவகுத்து வந்த அந்த 100 கார்களில் சில கார்களை ராஜு தரப்பினர் அடித்து உடைத்தார்கள்.

இதையும் படியுங்க  'நான் கடந்த பாதை யாருக்கும் வரக்கூடாது...' – பாமக தலைவர் உணர்ச்சி பொங்க பேச்சு

அன்புமணி கண்ணுக்கு எதிரிலேயே இவர்கள் இரண்டு பேருக்கும் இந்த சண்டை நடந்தது. ஆனாலும் பாமக தலைவராக இருக்கிற அன்புமணி இந்த உரசலை கண்டுக்கவே இல்லை. இரு தரப்பையும் கூப்பிட்டு பேசவும் இல்லை. இந்த நிலைமையில்தான் கள்ளிப்பட்டு ஆறுமுகம் தரப்பில் விக்ரபாண்டி கைப்புள்ள ராஜீவை டார்கெட் பண்ணி சில ஸ்கெட்சுகள் போடப்பட்டதாக தெரிந்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., இப்போது சமீபத்தில் கள்ளிப்பட்டு ஆறுமுகத்தை நேரில் அழைத்தார்.

”உன்னால ராஜு மற்றும் அவரோட தரப்புக்கு எதுவுமே ஆகக்கூடாது” என வார்னிங் செய்து ஆறுமுகத்துக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காது என லெட்டரும் எழுதி வாங்கி இருக்கிறார். அதே நேரம் விக்ரவாண்டி ராஜு தரப்பிலும், கள்ளிப்பட்டு ஆறுமுகத்தை குறி வைத்து சில பிளான்கள் எல்லாம் தீட்டப்பட்டு வருகிறது.

இப்போது விழுப்புரம் டிஐஜியாக இருக்கிற அருளரசு ஏற்கனவே ரவுடிகள் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவோட தலைமை ஆபீஸில் வேலை பார்த்தவர். அதனால் தமிழ்நாடு முழுக்க இருக்கிற அந்த ரவுடிகள் பற்றிய விபரங்கள் அவருக்கு பிங்கர் டிப்ஸில் இருக்கும். இந்த நிலைமையில்தான் விழுப்புரத்தில் இப்போது கள்ளிப்பட்டு ஆறுமுகத்துக்கும், விக்ரவாண்டி கைப்புள்ள ராஜீவுக்கும் இடையிலான அந்த டென்ஷன் சம்பந்தமாக விழுப்புரம் எஸ்பி-யிடம் மீண்டும் அவர் அலர்ட் பண்ணி இருக்கிறார்.

இதையும் படியுங்க  வேலியில் போகும் ஓணான்.. திருமாவுக்கு CM விஜய் வைத்த செக்..? வெளியேறும் விசிக… உள்ளே வரும் பாமக..!?

பாமக தலைவர் அன்புமணிக்கு இந்த இரண்டு பேர் தரப்பிலும் நடக்கிற எல்லா விஷயங்களும் நல்லாவே தெரியும். மாவட்ட எஸ்பி கூப்பிட்டு ஆறுமுகத்தை எச்சரிக்கிற அளவுக்கு நிலைமை மோசமாக போய் விட்டாலும் அன்புமணி இந்த இரண்டு பேரையும் கூப்பிட்டு எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என்பதுதான் பாமக நிர்வாகிகள் ரொம்பவே வருத்தப்படுகிறார்கள். அன்புமணிக்கு ஆறுமுகமும் வேணும் .ராஜுவும் வேணும்.

இப்படிப்பட்ட நிலைமையில்தான் இரண்டு பேரையும் கூப்பிட்டு ”நீங்க என்ன பண்ணாலும் கட்சிக்கு கெட்ட பேர் ஆயிடும். உங்களுக்கு அது நல்லது இல்ல” என எடுத்து சொல்ல வேண்டும். ஆனால் அன்புமணி இப்போது வரை அதை செய்யவே இல்லை. கள்ளிப்பட்டு ஆறுமுகம் ஏற்கனவே தவெகவில் அதாவது தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்தபோது அவருக்கு ஆபத்து வந்தபோதெல்லாம் கட்சியோட தலைவர் வேல்முருகன் கடந்த திமுக ஆட்சியில் பேச வேண்டியவர்களிடம் எல்லாம் பேசி அவரை காப்பாற்றினார்,

இப்போது நடக்கிற இந்த நகர்வுகள் வேல்முருகனுக்கு தெரிந்தும் ”அதான் நீ அங்க போயிட்ட இல்ல. உன்னோட பிரச்சினையை நீயே பார்த்துக்க” என அவரும் இதை பத்தி கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில பாட்டாளி மக்கள் கட்சிக்குள்ளேயே இரண்டு தரப்புக்கும் இடையில் எந்த நேரத்திலும் மிகப்பெரிய மோதலும், அசம்பாவிதமும் நடக்கலாம் என்கிற ஆபத்தான நிலைமைதான் இருக்கிறது.

இதையும் படியுங்க  7 மாஜிக்களுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்…! ஜெயில் கன்ஃபார்ம்..! அலறும் அறிவாலயம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 hours ago at 11 hours ago