Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Theatre

ஒரு படம் பாக்க தியேட்டருக்கு போறீங்க. டிக்கெட் விலை 300. 500 சீட் இருக்குற தியேட்டர்ல ஒரே ஷோவுக்கு ஒர லட்ச ரூபா கலெக்ஷன். ஒரு நாளைக்கு நாலு ஷோவும் ஹவுஸ்புல் ஆனா 6 லட்ச ரூபா வசூல். அப்படின்னா 30 நாளுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபா. ஆனா இந்த ஒரு கோடியே 80 லட்சமும் தியேட்டர் ஓனர் கைக்கு தான் வருமா? எல்லா செலவும் போக கடைசியில அவருக்கு எவ்வளவு லாபம் மிஞ்சும்?

அதை தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி ஒரு தியேட்டர் ஆரம்பிக்க எவ்வளவு முதலீடு தேவைன்னு பார்ப்போம். 500 சீட் இருக்கற தியேட்டர கட்டவே எத்தனை கோடி செலவாகும்? முதல்ல தியேட்டர் கட்ட இடம் வேணும். ஒரு நல்ல டவுன்ல பார்க்கிங் வசதியோட நிலம் வாங்குறதுக்கே நம்ம கணக்குப்படி சுமார் 2 கோடி ரூபாய் ஒதுக்கணும். அடுத்து கட்டிடம் தியேட்டர் ஹால், டிக்கெட் கவுண்டர், பார்க்கிங், கழிவரை எல்லாம் சேர்த்து 3 கோடி ரூபா. இப்பவே மொத்த முதலீடு 5 கோடியை
தொட்டுடுச்சு.

அடுத்து 500 சீட்டுகள். ஒரு சீட்டுக்கு 10,000 ரூபானா 50 லட்சம் செலவு. மொத்த முதலீடு 5ர கோடி. ஆனா படமோட இன்னும் நிறைய செலவு இருக்கு. இப்போ படம் போட ப்ரொஜெக்டர் வேணும். ஸ்கிரீன் மற்ற உபகரணங்களோட சேர்த்து 60 லட்சம். மொத்த முதலீடு 6 கோடியே 10 லட்சம். இன்னும் செலவு முடியல. சவுண்டும் தரமா இருக்கணும்.

ஸ்பீக்கர், ஆம்ப்ளிபையர், அகுஸ்டிக்ஸ் எல்லாத்துக்கும் 40 லட்சம் மொத்த முதலீடு 6 கோடி. அடுத்து மின்சார வசதி, ஜெனரேட்டர், தீ பாதுகாப்பு இதுக்கெல்லாம் இன்னும் 30 லட்சம். இப்ப மொத்த முதலீடு 7 கோடியே 30 லட்சம். அடுத்து லைசன்ஸ், அனுமதிகள், திறப்பு விழா ஏற்பாடுகள் இதுக்கெல்லாம் 20 லட்சம் ஒதுக்கினா ஆரம்ப முதலீடு 7 கோடி ரூபாய். 7.5 கோடி முதலீட்டுக்கு பிறகு தியேட்டர் திறந்தாச்சு. இனி ஒரு டிக்கெட் விலை 150 ரூபான்னு கணக்கிடுவோம். 500 சீட்டும் நிரம்பினால் 75000 ரூபாய்.

இதையும் படியுங்க  "டூப் இல்லை, கிராபிக்ஸ் இல்லை… தியேட்டர்களில் தெறிக்கவிட வரும் அஜித்தின் நிஜ ரேசிங் வேட்டை: ‘கிளாடியேட்டர்ஸ்’ மெகா அப்டேட்!"

ஆனால் எல்லா ஷோவும் ஹவுஸ்புல் ஆகுமா? பாதி சீட் மட்டும் நிரம்பினால் வசூல் 37500 தான். காலி சீட்டுக்கு வருமானமே கிடையாது. ஒரு ஷோவுக்கு 37500 நாலு ஷோனா தினமும் ஒர லட்சம் 30 நாளுக்கு 45 லட்சம் ஆனால் இது லாபம் இல்லை 45 லட்சமும் தியேட்டர் ஓனருக்கா? இல்லவே இல்ல படத்தை திரையிட வினியோகஸ்தருக்கும் பங்கு கொடுக்கணும்.

அந்த பங்கு ஒவ்வொரு படத்துக்கும் மாறும். 150 டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி 27. உள்ளூர் கேளிக்கை வரியும் பொருந்தலாம். இந்த வரிப்பணம் எல்லாம் ஓனரோட லாபம் கிடையாது. உதாரணத்துக்கு வினியோகஸ்தர் பங்கு 50%னு வைப்போம். 45 லட்சத்துல தியேட்டருக்கு 22 லட்சம். ஆனால் செலவுகள் இன்னும் இருக்கு. ஏசி, ப்ராஜெக்டர் சவுண்ட் சிஸ்டம் இதுக்கெல்லாம் கரண்ட் வேணுமே மாசத்துக்கு இரண்டு லட்சம் செலவுன்னு வைப்போம்.

இன்னும் சம்பளச் செலவும் இருக்கு. டிக்கெட் கவுண்டர் செக்யூரிட்டி கிளீனிங் மேனேஜர் எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கணும். மாசத்துக்கு 3 லட்சம் இன்னும் பராமரிப்பு செலவு இருக்கு.

ப்ராஜெக்டர் சர்வீஸ், ஏசி பராமரிப்பு, சீட் ரிப்பேர் இதுக்கெல்லாம் மாசம் ஒரு லட்சம் ஒதுக்கணும். ஆனா செலவு இன்னும் முடியல. 7 கோடி முதலீடு. அதுல 5 கோடி பேங்க் லோன்னா 15 வருஷத்துக்கு மாசம் சுமார் 5 லட்சத்து37000 இஎம்ஐ. இஎம்ஐ முழுக்க செலவு கிடையாது. முதல் மாசம் வட்டி நாலே கால் லட்சம். மீதி அசல் கடனை குறைக்கும். அதனால லாபமும் கையில் இருக்கும் பணமும் வேற. தியேட்டர் கட்டடம், ப்ராஜெக்டர், சீட்டுகள் இவற்றின் தேய்மானமும் கணக்கில் வரும். ஆனா அதுக்காக ஒவ்வொரு மாசமும் பணம் வெளியே போகாது.

இதையும் படியுங்க  கொடூரமான ஹன்டா வைரஸ்… நெதர்லாந்துக்கு அனுப்பப்பட்ட 2 இந்தியர்கள்.! ஸ்பெயின் எச்சரிக்கை..!

டிக்கெட் மட்டும் இல்ல பாப்கார்ன், ஸ்நாக்ஸ், கூல் ட்ரிங்க்ஸ்லயும் வருமானம் வரும். நம்ம கணக்குப்படி மாசத்துக்கு 9
லட்சம் விற்பனை. ஆனா அது முழுக்க லாபமா? 9 லட்சம் விற்பனை. ஆனா பொருட்கள் பேக்கிங் செலவு 40%. அதை கழிச்சா 5லட்சத்து 40ஆயிரம் மிச்சம்.

பார்க்கிங்லயும் வருமானம் வரலாம். அனுமதிக்கப்பட்ட கட்டணம்னு வச்சுக்கோங்க. செலவு போக மாசம் 50,000 மிச்சம்னா இதுவும் கூடுதல் வருமானம்தான். படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி விளம்பரங்கள் பார்த்திருப்பீங்கல்ல அதுலையும் தியேட்டருக்கு வருமானம் வரலாம். செலவு போக மாசம் 80 ஆயிரம். ஸ்நாக்ஸ்ல 5லட்சம். பார்க்கிங், விளம்பரமும் சேர்த்தா மொத்தம் 6 லட்சத்து7 0ஆயிரம் கூடுதல் வருமானம். ஓனர் சந்தோஷப்படுற நேரத்துல இன்னொரு கணக்கு உள்ளூர் கேளிக்கை வரி இதையும் சரியா கணக்கிடணுமே

150 டிக்கெட், ஜிஎஸ்டி, தனி கேளிக்கை வரி கணக்கும் தனி. வினியோகஸ்தர் பங்கையும் சரி பார்த்தாதான் ஓனருக்கு மிச்சம் எவ்வளவுன்னு தெரியும். 45 லட்சம் டிக்கெட் வசூல் பங்கு, செலவு, இஎம்ஐ கழிச்சு கூடுதல் வருமானமும் சேர்த்தால் 16 லட்சத்து 83ஆயிரம். ஆனா இது இறுதி லாபம் இல்லை. தியேட்டர் கட்டிடம், ப்ராஜெக்டர், சீட்டுகளோட மதிப்பு காலப்போக்குல குறையும். இதுதான் தேய்மானம். கணக்குல லாபம் குறையும். ஆனா அந்த நேரத்துல கையில இருந்து பணம் போகாது.

16 லட்சத்து 83000 க்கே வரி கட்டணுமா? இல்ல. கடன் வட்டி, தேய்மானம், அனுமதிக்கப்பட்ட செலவுகளை கணக்கிட்டுதான் வரிக்குறிய லாபம் தெரியும். ஆனா தியேட்டர் வெறும் 20% தான் நிரம்புனா 45 லட்சம் வசூல், 18 லட்சமா குறையும். சம்பளம், இஎம்ஐ அப்படியே இருந்தா நஷ்டம் வருமா? 18 லட்சம் வசூல் வந்தாலும் பங்கு, செலவு, இஎம்ஐ போகுது. கூடுதல் வருமானமும் சேர்த்த பிறகு மாசம் 91,000 பற்றாக்குறை.

இதையும் படியுங்க  இனி ‘போன் நம்பரே’ தேவையில்லை..! வாட்ஸ்அப் வரலாற்றிலேயே இல்லாத புது ரூல்ஸ்..!

ஒரு பிளாக்பஸ்டர் படம் வந்தா தியேட்டர் 80% நிரம்பும். டிக்கெட் வசூல் 72 லட்சம் தற்காலிக பணமிச்சம் 34 லட்சத்து 57ஆயிரம். ஒரு மாசம் பிளாக்பஸ்டர் 34 லட்சம் மிச்சம். அடுத்த மாசம் படம் ஃப்ளாப் 91000 பற்றாக்குறை. அப்போ வருஷக்கணக்கு என்ன? இரண்டு மாசம் ஹிட், ஏழு மாசம் சுமார், மூணு மாசம் ஃப்ளாப். வருஷம் முழுக்க கணக்கிட்டா சராசரி பணமிச்சம் மாசம் 15லட்சத்து 35,000. ஆனா ஓனர் கைக்கு மாசம் 15 லட்சம் மிச்சம்னா அதெல்லாம் ஓனருக்கு கிடைக்குமா? இல்லை. வரி, எதிர்கால ரிப்பேர், அவசர செலவுக்கான பணமும் ஒதுக்கணும்.

மிச்சமான பணத்துக்கே நேரடியா வரி கிடையாது. ஏழரை கோடி முதலீட்ல நிலத்துக்கு தேய்மானம் கிடையாது. ஆனா கட்டடம் தகுதியான உபகரணங்களுக்கு கிடைக்கும். கடன் அசல் கணக்கை சரி செய்தா வரிக்குரிய லாபம் சுமார் ஒன்ரை கோடி. கம்பெனி வரி கழிச்சு மாசம் 12 லட்சம் மிச்சம். ஆனா ரிப்பேர் புது உபகரணம் அவசரத்துக்காக 3 லட்சம் ஒதுக்குனா மீதி 9லட்சத்து 13ஆயிரம் கம்பெனி பணத்துல தனி நபர் வரைக்கும் ஒதுக்கினா கடைசியா ஓனர் கைக்கு மாசம் சுமார் 6லட்சடதது 39ஆயிரம். இது ஒரு மதிப்பீடுதான் 7.5 கோடி முதலீடு, மாசம் 6லட்சத்து 39ஆயிரம் மதிப்பீடு. ஆனா லாபத்துக்கு உத்தரவாதம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 hours ago at 8 hours ago

You missed