தேவர் குருபூஜைக்கு பசும்பொன்னுக்கு போகாத முதல்வர் விஜய் சென்னை நந்தனத்திலேயே அவருக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார். பசும்பொன் நிகழ்ச்சியை முதல்வர் கேன்சல் செய்ய காரணம் போலீஸ் போட்ட ஒரு ரிப்போர்ட் தானாம்.
தேவர் குருபூஜைக்கு பசும்பொன்னுக்கு செல்வதை எல்லா முதல்வர்களும் ஒரு வழக்கமாக வைத்திருந்தார்கள். குறிப்பாக ஜெயலலிதா காலத்தில் தேவர் குருபூஜை ஒரு அரசியல் விழாவாகவே பார்க்கப்பட்டது. அதிமுகவின் ஓட்டு வாங்கியின் முதுகெலும்பே முக்குலத்தோர் வாக்குகள் தான் எனகிற அளவுக்கு விமர்சிக்கப்பட்டது. அதிமுகதான் முக்குலத்தோர் என்கிற அளவுக்கு அந்த கட்சியுடைய சீனியர் அமைச்சர்களே பொதுவெளியில் பேசி வந்தார்கள்.
இந்த நிலையில் தான் திமுக -அதிமுக எந்த பக்கமும் சாயாத முக்குலத்தோர் வாக்குகளை அப்படியே அறுவடை செய்ய தேவர் குருபூஜைக்கு முதல்வர் விஜயை அழைத்து போக தென் மாவட்ட தவெக பிரமுகர்களும், அமைச்சர்கள் நிர்மல் குமார், பிரபு உள்ளிட்டோரும் முயற்சி செய்திருக்கிறார்கள். முதல்வரும் பசும்பொன்னுக்கு போக சம்மதித்து அதற்கான பிளானும் தயாராகியுள்ளது.
ஆனால், பசும்பொன்னுக்கு முதல்வர் வந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என ஏற்கனவே அங்கே வரும் கூட்டத்தோடு, முதல்வரை பார்க்கவும் வருகிற கூட்டத்தால் அசம்பாவிதம் நடக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது என உளவுத்துறை ஒரு நோட்டு போட்டுள்ளது. அதோடு பரமக்குடியில் இருக்கிற இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு போகாத நிலையில் பசும்பொன்னுக்கு மட்டும் முதல்வர் போனால் ஒரு தரப்பின் வெறுப்பையும் சம்பாதிக்க வேண்டி இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரோ, அல்லது சமுதாய தலைவருடைய நினைவிடத்துக்கும் போகாமல் இருக்கிறதே முதல்வர் ஒரு பொது தலைவராக எல்லா தரப்புக்கும் அடையாளப்படுத்தும் என அவரது நலம் விரும்பிகள் அட்வைஸ் செய்து தான் முதல்வர் விசிட் கேன்சல் ஆனதுக்கு காரணம் என்கிறார்கள்.
