சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அசத்தலான வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேஆஃப் வாய்ப்பு மங்கியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷன் மற்றும் ஹெய்ன்ரிக் கிளாசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் கடைசி ஓவரில் இலக்கை எட்டிய ஹைதராபாத் அணி திரில்லர் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணியைத் தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்திற்காக ராஜஸ்தான், பஞ்சாப், சென்னை மற்றும் டெல்லி அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
