Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Anbil mahesh

முன்னாள் பள்ளிப் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றுத் தருவதில் ரூ.100 கோடிக்கும் மேலாக லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைதை தவிர்க்க நடந்த கடைசி நிமிட பரபரப்பு
அன்பில் மகேஷ் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, அதைத் தவிர்ப்பதற்காகப் பல்வேறு திரைமறைவு பேச்சுவார்த்தைகளும், சீக்ரெட் மூவ்களும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கு பூதாகரமானபோது, சுமார் 117 புகார்தாரர்களிடம் பெறப்பட்ட தொகையை முழுமையாக செட்டில்மெண்ட் செய்து வழக்கை நீர்த்துப்போகச் செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது. எனினும், அன்பில் மகேஷ் தரப்பு இந்த எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், மேம்போக்காகக் கையாண்டதால் சமரச நகர்வுகள் தோல்வியில் முடிந்தன.

Anbil Mahesh

முன்ஜாமீன் மறுப்பு- உடனடி கைது
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பிந்தைய கட்டத்தில் முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்தபோதிலும், நீதிமன்றம் அதை நிராகரித்தது. சுதாரிப்பதற்குள் காவல்துறை அதிரடியாகக் கைதை நிறைவேற்றியது.

இதையும் படியுங்க  இனி எங்களைத் 'தலித்துகள்'னு கூப்பிடக்கூடாது..! இட ஒதுக்கீடு வேண்டாம்..! தலித் சமூகங்களின் அதிரடி முடிவு..!

‘தவெக’ அரசின் அரசியல் கணக்கு
தவெக ஆட்சியில், ஒரு முன்னாள் அமைச்சர் சிறைக்குச் செல்வது இதுவே முதல்முறை. முதல்வர் ஜோசப் விஜய் இந்த நடவடிக்கையின் மூலம் சில முக்கிய அரசியல்களங்களை நகர்த்தியுள்ளார் “மூன்று கோப்புகள் என் மேஜையில் உள்ளன” என்று முதல்வர் சட்டமன்றத்தில் குறிப்பிட்டபோது, “முடிந்தால் திறந்து பாருங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்தார். இது ஆளும்தரப்பின் வேகத்தை அதிகப்படுத்தியது.

தக்க வைக்கப்படும் அரசியல் பிம்பம்
சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, குற்ற விகிதங்கள் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், அரசின் பிம்பத்தைப் பாதுகாக்கவும் ‘அதிரடி நடவடிக்கை’ எடுக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

கைவிட்டுவிட்டதா திமுக தலைமை?
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டபோது, திமுக தலைமை, உடன்பிறப்புகளின் ஆரம்பகட்ட அமைதி பல கேள்விகளை எழுப்பியது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானபோது காட்டிய தீவிர எதிர்ப்பை, அன்பில் மகேஷ் கைதின்போது திமுக காட்டவில்லை. ஆரம்பத்தில் ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் மட்டுமே ஆதரவாக திரண்டனர்.

இதையும் படியுங்க  இனியும் அலட்சியமாக இருக்கக்கூடாது..! உண்மையை நாட்டுக்கு தெரிவிக்கணும்.. அன்புமணி ராமதாஸ் சரவெடி!

அன்பில் மகேஷ் விசாரணையில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தபோது, “உங்களை டார்கெட் செய்யவில்லை, அவர் பெயரை மட்டும் சொல்லுங்கள் விட்டுவிடுகிறோம் என்று விசாரணை குழு கூறியது” எனப் பேட்டியளித்தார்.

உதயநிதிக்கு சிக்கலா?
இந்த அறிக்கை, கட்சி இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினையே மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவது போல் உள்ளதாகக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் உதயநிதியிடம் கொண்டு சென்றனர். உதயநிதிக்கும், அன்பில் மகேஷுக்கும் இடையிலான நெருக்கமான நட்பைப் பிளவுபடுத்த உட்கட்சியிலேயே சிலர் திட்டமிட்டு காய்களை நகர்த்தியதாக அன்பில் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Anbil makesh

பாஜக -தேசியக் கல்விக் கொள்கை பின்னணி
மத்திய பாஜகா அரசு கொண்டு வந்த ‘தேசியக் கல்விக் கொள்கை’யை எதிர்த்து, மாநிலக் கல்விக் கொள்கையை (திராவிட மாடல் கல்விக் கொள்கை) அமல்படுத்துவதில் அன்பில் மகேஷ் தீவிரமாக இருந்தார். மத்திய அரசின் கல்வி நிதிக்காக விட்டுக்கொடுக்காமல் போராடியதன் காரணமாகவே, பாஜகவின் மறைமுக தூண்டுதலால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அன்பில் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்க  இனி தப்ப முடியாது..! எ.வ.வேலு கழுத்தை நெறிக்கும் மணல் மாபியா ஃபைல்ஸ்..! வலுவாக சிக்கிய ஆதாரங்கள்..! 

அறிவாலயத் தரப்பு மறுப்பு
முன்னாள் அமைச்சரைக் கைது செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய ஆளுநர் ஒப்புதல் போன்ற எந்தவிதமான சட்டப் நடைமுறைகளும் சரியாகப் பின்பற்றப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சிறைக்கே சென்று அன்பில் மகேஷைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு போன்ற தங்களின் ஆட்சித் தோல்விகளை திசைதிருப்பவே ஆளும் ‘தவெக’ அரசு இத்தகைய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

அன்பில் மகேஷின் கைது என்பது வெறும் ஊழல் வழக்கு சார்ந்த நடவடிக்கை மட்டுமல்லாமல், உட்கட்சிப் பூசல்கள், ஆளும்-எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான சவால்கள், தேசிய அளவிலான கல்விக் கொள்கை மோதல்களின் ஒட்டுமொத்தப் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago