38 உயிர்களை கொன்று தின்ற கொடூரன்… 15 ஆண்டு வேட்டைக்கு முற்றுப்புள்ளி!உகாண்டாவையே உறைய வைத்த ‘மனித வேட்டைக்காரன்’ முஜிரிஸி மோசஸ் கைது!பகிரங்க விசாரணை நடத்தி தூக்கிலிடுவோம் என ராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு!
ஆப்பிரிக்க கண்டத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது ஒரு கைது. 15 ஆண்டுகளாக நிழலாக திரிந்து, 38 பேரை கொன்று, அவர்களின் உடல்களை தின்றதாக குற்றம் சாட்டப்பட்ட கொடூர கொலைகாரன் சிக்கிவிட்டான்.நள்ளிரவில் வந்த அறிவிப்பு!
அக்டோபர் 26, திங்கட்கிழமை. உகாண்டாவின் பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா தனது எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டார். கைவிலங்கிடப்பட்டு, காயங்களுடன் சுவரில் சாய்ந்திருக்கும் ஒரு மனிதனின் புகைப்படம் அது.”நம் சக குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன். தீயவன் முஜுரிஸி மோசஸை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
உகாண்டா வரலாற்றின் மிக மோசமான தொடர் கொலைகாரன் மற்றும் மனித மாமிசம் உண்பவன் இவன்தான்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவன் 2010 முதல் 2025 வரை மசாகா, இபாண்டா, காசோ ஆகிய மூன்று மாவட்டங்களில் 38 பேரை கொன்று தின்றதாக குற்றம் சாட்டியிருக்கிறார் ஜெனரல். “அவனை பகிரங்கமாக விசாரித்து, நிச்சயமாக தூக்கிலிடுவோம்” என்ற அவரது வார்த்தைகள் உகாண்டா முழுவதும் தீயாய் பரவியது.
15 ஆண்டு… 38 உயிர்கள்… 3 மாவட்டங்கள்!விசாரணை அதிகாரிகள் சொல்லும் பின்னணி, திகிலூட்டுகிறது .மத்திய உகாண்டாவின் மசாகா, மேற்கு உகாண்டாவின் இபாண்டா மற்றும் காசோ… இந்த மூன்று மாவட்டங்களிலும் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து மர்ம மரணங்கள் நடந்துள்ளன.
குடும்பம் குடும்பமாக வீடு புகுந்து தாக்குதல், ஆட்கள் மாயமாதல், அடையாளம் காண முடியாத நிலையில் உடல்கள் கிடைத்தல் என தொடர் சம்பவங்கள். ஆரம்பத்தில் இதை தனித்தனி கொலைகளாக கருதிய போலீஸ், பின்னர் ஒரே பாணியில் நடக்கும் கொலைகளை கண்டு திடுக்கிட்டது. இரவு நேரங்களில் தனிமையான வீடுகளை குறிவைத்து, குடும்பத்தினரை கொடூரமாக தாக்கி கொலை செய்வது அவனது பாணி என கூறப்படுகிறது.பல ஆண்டுகளாக தலைமறைவாக திரிந்த அவனை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இறுதியில் உகாண்டா பாதுகாப்புப் படையினரின் அதிரடி வேட்டையில் அவன் சிக்கியிருக்கிறான்.’ உகாண்டாவின் வரலாற்றிலேயே மிக மோசமானவன்’ முஜுரிஸி மோசஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவன் உகாண்டாவின் மிக மோசமான தொடர் கொலைகாரனாக பதிவு செய்யப்படுவான் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன
உகாண்டாவில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. எனவே, “பகிரங்க விசாரணை” நடத்தி தூக்கு தண்டனை வழங்கப்படும் என ராணுவ தளபதியே அறிவித்திருப்பது, இந்த வழக்கிற்கு அந்நாட்டு அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது
இன்னும் விடை தெரியாத கேள்விகள்!
15 ஆண்டுகளாக இவன் எப்படி தப்பித்தான்? இவனுக்கு உதவியவர்கள் யார்? • கொலைகளுக்கான உண்மையான நோக்கம் என்ன? மூடநம்பிக்கையா, மனநோயா? • காணாமல் போனவர்களின் முழு பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்டதா? விசாரணை தொடங்கியிருக்கிறது. பகிரங்க விசாரணையில் உண்மைகள் வெளிவரும் என உகாண்டா மக்கள் காத்திருக்கிறார்கள்.
38 உயிர்களின் கதறலுக்கு நீதி கிடைக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.
