Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Anbil mahesh

”மக்கள் பணத்தில இருந்து ஒரு பைசா கூட தொட மாட்டோம்.. தொட்டவர்களையும் விடமாட்டோம்” தவெக ஆட்சிக்கு வந்த நான்கே மாதத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை ஊழல் குற்றச்சாட்டில்
சிறையில் தள்ளி இருக்கிறது. தவெக ஆட்சிக்கு வந்ததுமே தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்க லஞ்சம் வாங்கியதாக அந்த சங்கத்தின் தலைவராக இருந்த திமுக நிர்வாகியான பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

ஜூன் மாதம் பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் அப்போதில் இருந்தே லஞ்ச புகாரில் அன்பில் மகேஷ் பொய்யாமழியின் பெயரும் அடிப்பட ஆரம்பித்தது. தற்போது குற்றப்பிரிவு போலீஸ் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை கைது செய்திருக்கிறது. பள்ளி கல்வித்துறைக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக இருந்தபோது புதிதாக தொடங்கப்படும் தனியார் பள்ளிகளுக்கு என்.ஓ.சி என்று சொல்லக்கூடிய தடையில்லா சான்றிதல் வழங்க 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

Anbil mahesh

தனியார் பள்ளிகளை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற நிலையில், அதற்கும் லஞ்ச வேட்டை நடந்திருக்கிறது. நர்சரி பள்ளிகளுக்கு ₹3 லட்சம் ரூபாய் வரையிலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு ₹5 லட்சம் ரூபாய் வரையிலும், சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலும் லஞ்சம் வாங்கப்பட்டது என பகீர் கிளப்பப்பட்டது. ஒட்டுமொத்தமாக 177 பள்ளிகளிடமிருந்து கட்டுக்கட்டாக லஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்ட நிலையில் அடுத்த கட்ட விசாரணை அன்பில் மகேஷ் பொய்யா மொழியை நோக்கி நகர்ந்தது.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது. கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதை போல ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரை லஞ்சமாக வாங்கியதாக அதிர வைக்கும் தகவல்களும் வெளியாகின. லஞ்சம் கொடுக்காத பள்ளி நிர்வாகத்தை அலைக்கழிப்பதோடு லஞ்சம் வாங்குவதற்கு டிபிஐ வளாக கட்டடத்தில் இரண்டாவது மாடியில் தனியாக ஒரு அறையே இயங்கி வந்திருக்கிறது. அரசு அலுவலக கட்டடத்தில் வைத்துதான் தனியார் பள்ளிகளிடம் இருந்து லஞ்ச பணம் பெறப்பட்டிருக்கிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படியுங்க  "3 நாள் டைம்… மன்னிப்பு கேளுங்க, இல்லனா கோர்ட்டை பாருங்க!" – பல்லவிக்கு பறந்த அதிரடி நோட்டீஸ்!
Anbil Mahesh

கட்சி நிர்வாகி, நண்பர், உறவினர் என மூன்று பேரை வைத்துதான் தனியார் பள்ளிகளிடமிருந்து லஞ்சம் வாங்க வைத்தார் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் தியாகராய நகரில் குளோபல் 360 என்ற நிறுவனத்தை தொடங்கி தனியார் பள்ளி மாணவர்களுக்கான ஷூ, பெல்ட் யூனிபார்ம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த அன்பில் மகேஷ் தரப்பு அந்த நிறுவனத்தில் மட்டும்தான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி நிர்பந்தம் செய்ததாகவும் இதன் மூலம் கோடி கணக்கில் லாபம் பார்த்ததாகவும் சொல்லப்பட்டது.

இதனை அடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில், மத்திய கூற்ற பிரிவு சோதனை நடத்தியது. சென்னை, திருச்சியில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் குற்றப்பிரிவு போலீசின் கையில் சிக்கிய நிலையில், அடுத்த கட்டமாக அன்பில் மகேஷை கைது செய்ய ஆயத்தமானது போலீஸ். ஆனால் கைதுக்கு பயந்து முன்ஜாமீன் கேட்டு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்ததால் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன்ஜாமின் கொடுக்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் உடனே கைது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. விசாரணை ஆரம்ப நிலையில் இருக்கும் போது, முன்ஜாமீன் வழங்க முடியாது என கூறிய நீதிமன்றம், கட்சி நிதி என்ற பெயரில், பெரிய அளவில் பணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த தொகை யாரை சென்றடைந்தது என்பதை விசாரிக்க வேண்டும் எனவும், முன்ஜாமீன் வழங்கினால், விசாரணை பாதிக்கப்படக்கூடும் என கூறியும் மறுத்துவிட்டது.

இதையும் படியுங்க  எடப்பாடிக்கு நோ… ஸ்டாலினிடம் பம்மல்..! விஜய்யின் டபுள் கேம்..! பகீர் பின்னணி..!

காலை 11 மணிக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவு வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, கைதுக்கான அறிகுறி தென்பட தொடங்கியது. திமுக முகாம்களில் பரபரப்பு டதொற்றிக் கொண்டது. முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என ஆலோசனை நடத்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைந்தகரையில் உள்ள திமுக மூத்த வழக்கறிஞர் வில்சனின் வீட்டுக்கு சென்று இருந்தார்.

ஆலோசனை முடிந்து வெளியே வந்த அன்பில் மகேஷ் பொய்யா மொழியை வில்சன் வீட்டு வாசலில் வைத்தே மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. சிரித்த முகத்துடன் காவல்துறை வாகனத்தில் ஏறிச் சென்றிருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

சுமார் 4ஐந்து மணி நேர விசாரணைக்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் அன்பில் மகேஷ். கைது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்பில் மகேஷ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாக கூறியதோடு தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது எனவும் சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்வோம் எனவும் கூறினார்.

Anbil makesh

அவடைய அழைப்பை ஏற்று முழுமையாக நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறோம். நாங்க ஏற்கனவே வந்து செப்டம்பர் மாசம் 18 ஆம் தேதி உங்க எல்லாத்துக்குமே தெரியும். கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் நாங்க முழு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கோம்” என்றார். லஞ்ச புகாரில் சிக்கிய தனியார் பள்ளிகள் சங்க தலைவர் பிடி.அரசகுமார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் முத்துக்குமார் என்பவர் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்க  "அதிகார பலத்தை வென்ற அன்பு பலம்! – திராவிடக் கோட்டைகளை உலுக்கிய முதல்வர் விஜய்யின் திருச்சி முழக்கம்!"

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் உறவினரான வாலாடி கார்த்தியும் போலீசாரின் விசாரணை வலையத்தில் இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு வந்த நான்கே மாதத்தில் திமுக முன்னாள் அமைச்சரை ஊழல் குற்றச்சாட்டில் தவெக அரசு கைது செய்திருக்கும் நிலையில் அடுத்த டார்கெட் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை உயர் நீதிமன்ற வழாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, திமுக வழக்கறிஞர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் 400 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கருதுவதாகவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காவல் விசாரணை தேவை என்று கருதித்தான் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் திமுக தரப்பு வழக்கறிஞர்களோ கைது செய்ய ஆளுனரிடம் அனுமதி பெறவில்லை எனவும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததால் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நவம்பர் 6ற ஆம் தேதி வரை அன்பில் மகேஷை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 hours ago at 7 hours ago