Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில், கணவன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாயின் உயிரிழப்பை தாங்க முடியாமல் மகனும் ரயிலில் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜாமணி – ஜானகி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உடல்நலக்குறைவால் ராஜாமணி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கணவர் உயிரிழந்த வேதனையில் இருந்த ஜானகி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இரு மகன்களும் தாயின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், ஜானகியின் இரண்டாவது மகன், தாயின் உயிரிழப்பை தாங்க முடியாமல் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜானகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரயிலில் பாய்ந்து உயிரிழந்த மகன் தொடர்பாகவும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவர் உயிரிழந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டதும், அதனைத் தொடர்ந்து தாயின் மரண வேதனையை தாங்க முடியாமல் மகனும் உயிரிழந்ததும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago