Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Rahul vijay

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் தவெக அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் திடீரென கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஆரம்பத்தில், தவெகவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில், இந்தியா கூட்டணியில் அக்கட்சி இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை என ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது இந்தியா கூட்டணி கூட்டத்தில் தவெக அமைச்சர்கள் நேரடியாக பங்கேற்றிருப்பது, அதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் நகர்வு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ராகுல் காந்தியின் சென்னை வருகை
இந்த விவகாரத்திற்கு பின்னணியாக ஒரு முக்கியமான சந்திப்பை அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வரும் 10ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சென்னை வர உள்ளார். அப்போது நடைபெறும் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.

சென்னைக்கு வரும் ராகுல் காந்தி, மரியாதை நிமித்தமாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேச வேண்டும் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தரப்பில் இருந்து ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதையும் படியுங்க  விட்டில் பூச்சிகளாக வீழ்ந்துவிடாதீர்கள்..! அனைவரும் ஒன்று கூடுவோம்.. எடப்பாடி அழைப்பு..!
Republic Tamil

சோனியாவும் பச்சைக்கொடி
ராகுல் காந்தி – ஸ்டாலின் சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பாக இல்லாவிட்டாலும், நட்பு ரீதியாக நடைபெறலாம் என காங்கிரஸ் கட்சியின் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்யுள்ளனர்.

இந்த சந்திப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்த சந்திப்பு தொடர்பாக திமுக தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான தகவலும் வெளிப்படாமல் அமைதி காக்கப்படுகிறது.

ஸ்டாலினுக்கு சென்ற தகவல்
இந்த தகவல்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றதாகவும், அதன் பின்னரே அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தவெக இந்தியா கூட்டணியில் இருப்பதையும், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமான உறவை கொண்டிருப்பதையும் வெளிப்படுத்தும் வகையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் தவெக அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா மற்றும் மரிய வில்சன் ஆகியோர் கலந்துகொள்ளுமாறு முதலமைச்சர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவெக – காங்கிரஸ் நெருக்கம்
ஆரம்பத்தில் தவெகவுக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாததால் இந்தியா கூட்டணியில் அக்கட்சி இடம்பெற வேண்டிய அவசியம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது அந்த கூட்டணி கூட்டத்திலேயே தவெக அமைச்சர்கள் பங்கேற்றிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதையும் படியுங்க  அரசு டெண்டர்… கோடிகளில் பேரம்..? CM விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் பெயரில் நடக்கும் மோசடி..?

இது தவெக – காங்கிரஸ் இடையிலான அரசியல் நெருக்கத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கையா அல்லது கூட்டணி ரீதியான ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாக நடந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

stalin Rahul

ராகுல் – ஸ்டாலின் சந்திப்பை சுற்றி பரபரப்பு
இதற்கிடையே, சென்னைக்கு வரும் ராகுல் காந்தி, முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அந்த சந்திப்பு நடைபெற்றால், அது அரசியல் ரீதியான சந்திப்பாக இல்லாமல் மரியாதை, நட்பு ரீதியான சந்திப்பாக மட்டுமே இருக்கலாம் என காங்கிரஸ் தரப்பில் சிலர் கருதுகின்றனர்.

ஆனால், தமிழக அரசியலில் திமுக, காங்கிரஸ் மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து தொடர்ந்து பல்வேறு அரசியல் கணக்குகள் பேசப்பட்டு வரும் நிலையில், ராகுல் காந்தியின் சென்னை வருகையும், அதையொட்டி நடைபெறும் சந்திப்புகளும் கவனம் பெற்றுள்ளன.

சத்தியமூர்த்தி பவனில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் தவெக அமைச்சர்களின் திடீர் பங்கேற்பு, ராகுல் காந்தியின் சென்னை வருகை மற்றும் ஸ்டாலின் – ராகுல் சந்திப்பு குறித்த தகவல்கள் என அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.

இதையும் படியுங்க  "ஆர்.கே. நகரில் பயங்கரம்: திமுக பிரமுகர் மீது ஓட ஓட விரட்டி கொலைவெறித் தாக்குதல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago