இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. என்பது போல், முதல்வர் ஜோசப் விஜயை தங்கள் வளயத்திற்குள் வைத்துக் கொண்டு, அரசின் அனைத்து துறைகளிலும் தலையிட்டு, தாங்கள்தான் அரசு என்பது போல் ஆதிகத்தை செலுத்தி வருகிறது விஷ்ணு ரெட்டி குரூப். 30 வருடங்களாக உருவாக்கிய கட்டமைப்பு. விஜய் முகத்திற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. இதனை இவர்களால் இழந்து விடக்கூடாது என ஒற்றை ஆளாய்
புஸ்ஸி ஆனந்த் கம்பு சுழற்ற… ஆட்சியில் உள்ள சில அமைச்சர்களையும், அதிகாரிகளையும் கொண்டு அவருக்கு எதிராகவே கட்சிக்குள் கலக்கத்தை உருவாக்கியுள்ளது விஷ்ணு ரெட்டி குரூப்.
சமீபத்தில் ரூபாய் 42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் குளறுபடிகள் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக அரசின் நீர்வளத்துறை ஒதுக்கியுள்ள ரூபாய் 42 கோடி மதிப்பிலான 202 டெண்டர்களில் மெகா
முறைக்கேடுகள் அரங்கேறி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு வெறும் இரண்டு நாட்களும் 50க்கும் மேற்பட்ட பணிகளுக்கு வெறும் ஏழு நாட்களும் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது முறைகேடு குறித்த சந்தேககத்தை மேலும் வலுவாக்குகிறது என
பாஜாகாவின் மாநில தலைவர் கேள்வி எழுப்பினார்.

அதே வேகத்தில் சுருதியை குறைக்காமல் சில யூடியூப் சேனல்களில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்திற்கு எதிராக வன்மத்தை கக்கின. முன்னதாக மே 18ஆம் தேதி அன்று நீர்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட சத்தியபிரதா சாகு 75 நாட்களில் திடீரென இலாகா மாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு நீர்வளம், ஊரக வளர்ச்சியாகிய இரு துறைகளுக்கும் தனித்தனியாக இரு செயலாளர்களை போட வேண்டும். ஆனால் இரண்டு துறைகளுக்கும் பிரசாந்த் எம். வார்ட்னரே என்பவரை செயலாளராக போட்டு துறை பணிகளை செய்யவிடாமல் தடுத்து முதல்வரிடம் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறது தெலுங்கு பேசும் லாபி.
அத்தனை சம்பவங்களும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிராகவே திரும்புகின்றனவே. முதல்வர் ஜோசப் விஜய்க்கு அருகில் விஷ்ணு ரெட்டி குரூப் ஒரு மாய வலையத்தை உருவாக்கியுள்ளது. அந்த வலையத்திற்குள் விஷ்ணு ரெட்டி, சுஜய் ரெட்டி, அணில், சுனில் ரெட்டிகள் மட்டும்தான் செல்ல முடியும். அதனை விடுத்து ரெட்டிகளின் அனுமதியுடன் சாய்க்குமார் உள்ளிட்ட தெலுங்கு மொழி பேசும் மக்கள் மட்டும்தான் செல்ல முடியும். ஏன்? ஜான் ஆரோக்கியசாமியே செல்ல முடியாது.
தானும் உங்கள் சமூகம் தான் என ரெட்டிகளிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. ஆனாலும் அவரால் தனித்து இயங்க முடியாது. மாப்பிள்ளை அவர்தான். அவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது என்பது போல முதலமைச்சர் ஜோசப் விஜய்தான். ஆனால் நாங்கள்தான் முதலமைச்சரே என்கிறது தெலுங்கு மொழி பேசும் ரெட்டி குரூப்.

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை அரசு ஊழியர்களில் தெலுங்கு மொழி பேசும் ஊழியர்கள் சற்று அதிகார மையமாகத்தான் திகழ்கின்றார்கள். இது காணக்கூடிய காட்சிகளில் ஒன்று. அப்படி இருக்க தங்களை தாண்டி எந்த பவர் சென்டரும் உருவாக முடியாது. அதில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தும் விதிவிலக்கல்ல என்கிறது தலைமை செயலக வட்டாரம்.
உளவுத்துறை அதிகாரி ஒருவரோ ”தவெக அரசில் இயங்கும் அத்தனை அமைச்சர்களுக்கும் எதிராக தனித்தனியாக சமூக வலைத்தளங்களை இயக்கும் சோசியல் வார்ரூம் செயல்படுகின்றது. தவெக அரசில் உள்ள அமைச்சர்கள் மூன்று பிரிவுகளாக உள்ளனர். ஒன்று புஸ்ஸி ஆனந்த் டீம். இது ரசிகர் மன்றத்தில் இருந்து
அரசியலுக்கு வந்த அமைச்சர்கள் டீம். இதில் வினோத், ராஜ்குமார், காந்திராஜ், ஜெகதீஸ்வரி, விஜய் பாலாஜி, விஜய் தமிழன் பார்த்திபன், ரமேஷ், தென்னரசு, சம்பத்குமார், முகமது பர்வேஸ், ஜேடி சரத்குமார், விக்னேஷ் மற்றும் சி. விஜயலட்ஷ்மி உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளனர்.
மற்றொன்று ஆதவ் அர்ஜுனாவின், கீர்த்தனா, வெங்கட்ரமணன், அருண்ராஜ் உள்ளிட்டோர், இன்னொன்று நிர்மல் குமார், ராஜ்மோகன் என இரண்டு பக்கமும் தலையை ஆட்டும் அமைச்சர்களாகவும் உள்ளனர்” என்கிறார் அவர். இது இப்படி இருக்க உளவுத்துறை தொடர்பான செய்திகளை கேட்டு வாங்கி தங்களுக்கு சாதகமான
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைப் பற்றிய புகார்களை எடுத்துவிட்டு தங்களுக்கு வேண்டாத அமைச்சர்கள் அதிகாரிகளைப் பற்றிய புகார்களை மட்டும் முதல்வர் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் இதே விஷ்ணு ரெட்டி குரூப் தானாம்.
அதுபோக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வடகிழக்கு பருவமலை காலங்களில் ஏற்படு செய்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு தவெக அரசு நீர்வளத்ததுறைக்கு 42 கோடி ரூபாய் ஒதுக்கியது. மேற்படி விஷ்ணு ரெட்டி கும்பல் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி துறை அமைச்சருக்கே தெரியாமல் தங்களுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்கள் அடங்கிய சிண்டிகேட்டை உருவாக்கி அவர்கள் மட்டும் டெண்டர் எடுக்க முயற்சி செய்தனர்.
இது குறித்து விவாதம் எழும்பிய நிலையில் நீர்வளத்துறை டெண்டரில் குளறுபடிகள் தவெக அரசின் நிர்வாக மாற்றம் இதுதானா? என்று கேள்வி எழுப்பப்பட்டு, அமைச்சர் ஆனந்தை குற்றவாளி ஆக்கியதும் இதே விஷ்ணு ரெட்டி குரூப் தான் என்கிற தகவலும் கோட்டை வட்டாரத்தில் சுற்றி வருகிறது. அதேவேளையில் மாற்று கட்சியிலிருந்து எம்எல்ஏ பதவியுடன் இங்கு வந்தவர்களுக்கு பதவி என்பதும் உண்மைதான். நடக்கிற இடைத்தேர்தலில் புஸ்ஸி ஆனந்தின் சாய்ஸ் இதே வேட்பாளர்கள் அல்ல. சத்தியபாமா, மரகதம் உள்ளிட்டோருக்கு வாரிய தலைவர் பதவி கொடுக்கலாம். வேட்பாளராக களமறக்கினால் கடுமையான எதிர்ப்பு வரும் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஆனந்த்.

ஆனால் ஆதவ் அர்ஜூனா மூலம் புசி ஆனந்தனை தாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர் அவர்கள்.
எதிர்பார்த்தது போல் நாலா பக்கமும் எதிர்ப்பு கிளம்பியது. உளவுத்ததுறையும் வாய்ப்பில்லை என நோட் போட்டது. தோல்வியை காரணம் காட்டி புஸ்ஸி ஆனத்தை ஒழித்து விட வேண்டும் என்பது ஆதவ் அர்ஜுனா, விஷ்ணு ரெட்டிகளின் எண்ணம். இருப்பினும் தற்போது களத்தில் இறங்கி கடுமையாக வேலை செய்கிறார் அமைச்சர் ஆனந்த். முன்பே அவர் சொன்னதை கேட்டிருக்கலாமே என்கின்றனர் விபரம் அறிந்த தவெகவினர்.
இந்நிலையில் புஸ்ஸிக்கு எதிராக தவெக நிர்வாகிகள் புஸ்ஸியை பற்றி ஆபாசமாக பேசுவது போல் சீச்சி சீ ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதுவும் ரெட்டி குரூப்பின் வேலையா? என கிசுகிசுக்கிறார்கள் தவெகவினர். ஒரு பக்கம் விஷ்ணு ரெட்டி, மறுபக்கம் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரையும் சமாளித்து கரையேறுவாரா புஸ்ஸி ஆனந்த்?
