Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஆரோவில் காவல் நிலையத்தில் பஞ்சாயத்து புதுச்சேரி அருகே அமைந்துள்ளது ஆரோவில் சர்வதேச நகரத்தில் சுமார் 3500 வெளிநாடு மற்றும் உள்நாட்டினர் வசித்து வருகின்றனர். ஆரோவில் சர்வதேச நகரத்தை சுற்றி கிரவுண்ட் வாக் திட்டம் நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கி அதன் பேரில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பணிகள் தொடர்பாக ஆரோவில் குடியிருப்பாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் ஆரோவில் நகரத்தில் உள்ள இயற்கை சூழல் அழிக்கப்பட்டும் மரங்களை வெட்டுவதால் பாரம்பரியம் கெட்டு விடுவதாக ஆரோவில் நிர்வாகம் ஒரு பிரிவாகவும், ஆரோவில் குடியிருப்பாளர்கள் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று அறக்கட்டளை நிர்வாக அலுவலகத்தில் ஒரு தரப்பினர் மீட்டிங் நடத்தினர் அங்குவந்த மற்றொரு தரப்பினர் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது என்பதில் இரு தரப்பினரும் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் அந்த சம்பவம் தொடர்பாக சண்டையிட்டுக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்க  'இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் உதவ முன்வருவோம்': பிரதமர் மோடிக்கு டிரம்ப் உறுதிமொழி..!

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago