https://republictn.com/

‘கொளத்தூர் தோல்வி அதிர்ச்சி’யில் இருந்து உடன்பிறப்புகள் இன்னும் மீளவில்லை. தி.மு.க தலைவர் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வி அடைந்ததை சித்தரஞ்சன் சாலைக்கு பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்விக்கு முழுக் காரணம் யார் என்ற தேடலில், ‘குற்றவாளி’ கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு.

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி குறித்து விசாரணை நடத்த சேகர்பாபுவை அழைத்த தி.மு.க குடும்பம், அவரிடம் மிகக் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது. கட்சி நிர்வாகிகளைக் கட்டுப்படுத்தத் தவறியது, தேர்தல் பணிகளில் தொய்வு எனப் புகார்கள் அடுக்கப்பட, ஒருகட்டத்தில் சேகர்பாபு தேம்பித் தேம்பி அழுது மன்னிப்பு கேட்டாராம்.

ஆனாலும், “எல்லாம் செய்துவிட்டு இப்போது அழுவது வெறும் நாடகம்” என்று ஆத்திரமடைந்த குடும்பத்தார் அங்கிருந்த சொம்பை எடுத்து அவர் மீது வீசி அடித்ததாக ஒரு பரபரக்கப்படுகிறது. இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல், “நான் எம்.எல்.ஏ பதவியையும், கட்சிப் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடுகிறேன், என்னை விட்டுவிடுங்கள்” என்று சேகர்பாபு சாஷ்டாங்கமாக விழுந்து கதறியதுதான் தற்போது அறிவாலய வட்டாரத்தின் ஹாட் டாபிக்.

கொளத்துார் தொகுதியில் மக்களுக்கு நன்றி கூற ஸ்டாலின் சென்றபோது, முன்னாள் அமைச்சரும், துறை முகம் தொகுதி தி.மு.க – எம்.எல்.ஏ.,வுமான சேகர்பாபுவும் உடன் சென்றிருந்தார். அப்போது, திமுகவினர் சிலர் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு வருத்தப்பட்டு கண்ணீர் சிந்தினர். அங்கே இருந்த சேகர்பாபுவும் கதறி கண்ணீர் விட்டார். இந்நிலையில், துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, அதே தொகுதியில் மு.க.ஸ்டாலினை போட்டியிட வைத்து வெற்றி பெற வைப்பதாக மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆகையால், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், அங்கு மகேஷ் போட்டி யிட்டால் தோல்வி அடைவார் என அந்தத் தொகுதி தி.மு.க நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். இதனால், திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதேவேளை, விஜய் வெற்றி பெற்ற தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சென்னை துறைமுகம் தொகுதி, ஏற்கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், அங்கு மு.க.ஸ்டாலின் களமிறங்க வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago