Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ, அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் எனக் கூறி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி, 258 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் என்ற உண்மை அம்பலமாகியுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால், அமலாக்கத்துறை குறிப்பிட்டிருந்த ஜான் பிரிட்டோ, தனது உறவினர் அல்ல எனக்கூறி, ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங்குக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் விசாரணைக்கு வந்ததது. அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்: ஆதவ் அர்ஜுனாவின் மாமனார், மாமியார் மற்றும் மாமியாரின் சகோதரர் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், ஆதவ் அர்ஜுனாவும் சிபிஐ வழக்கை எதிர்கொண்டு வருகிறார். வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டபோது, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நிலுவையில் இருப்பதை அவரே தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்க  திமுகவில் அதிரடி ஆட்டம்..! உள்ளே வரும் எஸ்.பி.வேலுமணி… வெளியேறும் செந்தில் பாலாஜி..! மண்டைக் காய்ச்சலில் எடப்பாடி..!

இத்தகைய பின்னணிகளை மறைத்துவிட்டு தொடரப்பட்டுள்ள இந்த மனுவின் மூலம் அவர் எந்த நிவாரணமும் கோர சட்டப்படி உரிமையில்லை.போதைப்பொருள் கடத்தல் விவகாரத்திலோ அல்லது அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் ஜான் பிரிட்டோவை தொடர்புபடுத்தியோ சமூக வலைதளங்களில் பதிவிட திமுக ஐடி விங்குக்கு நான் எந்தவித அனுமதியோ அறிவுறுத்தலோ வழங்கவில்லை. திமுக தலைவர் என்ற முறையில் அணிகளின் நிர்வாகிகள் மீது நிர்வாக ரீதியான கட்டுப்பாடு மட்டுமே உண்டு. அணிகளின் உறுப்பினர்கள் செய்யும் தனிப்பட்ட செயல்களுக்கு தலைவரைச் சட்டப்படி பொறுப்பாக்க முடியாது.

ஜான் பிரிட்டோ என்பவர் தனது உறவினர் என்பதையோ, அவர் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது என்பதையோ ஆதவ் அர்ஜுனா மறுக்கவில்லை. எனவே, உள்நோக்கத்துடன் பதிவுகள் வெளியிடப்பட்டதாக அவர் கூறும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. ஏற்கனவே என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, தற்போது மானநஷ்ட ஈடு கோர முடியாது. இதனால் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இதனிடையே, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய திமுக ஐடி விங் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையேற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்க  விஜய் கரூர் செல்லும் முன்பே செக் வைத்த நீதிமன்றம்.. 32 பேர் அரசு வேலை விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு!
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago