நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ஏழுமலை, தவெக சார்பில் அருள் ஆறுமுகம் மற்றும் நாதக சார்பில் விக்னேஷ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திமுக மற்றும் தவெக மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். இறுதியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தை தோற்கடித்தார்.
இதையடுத்து எ.வ.வேலு வெற்றியை எதிர்த்து அருள் ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதால் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என எ.வ.வேலு தரப்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி இந்த தேர்தல் வழக்கை விசாரிப்பதற்கு எந்த முறையான காரணம் இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து திருவண்ணாமலை தொகுதியில் திமுக எம்எல்ஏ எ.வ.வேலுவின் வெற்றியை உறுதி செய்ததை அடுத்து தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தின் தேர்தல் வழக்கை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
