பண்டிகைகளும் வழிபாடுகளும் ஒவ்வொரு மக்களின் நம்பிக்கை சார்ந்த உணர்வுகளாகப் பார்க்கப்படும் வேளையில், திட்டமிட்டே மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் போக்கும், உணர்வுகளைப் புண்படுத்தும் நிகழ்வுகளும் தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி திருநாளைக் கோடிக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, பக்திப் பரவசத்துடன் வழக்கம் போல் கொண்டாடி வந்த நிலையில், மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பதிவிட்டுள்ள ஒரு சமூக வலைத்தளப் பதிவு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
”கோழி பிரியாணி, குடல் க்ரேவி, விரால் மீன் குழம்பு என முழுமையான உணவுடன் விநாயகர் சதூர்த்தி விடுமுறை நாள் இனிதே முடிவுற்றது.” என க்கூறி அசைவ உணவு அருந்தும் புகைப்படத்தை பதிவேறியுள்ளார் மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி.
இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ”கோழி பிரியாணி, குடல் க்ரேவி, விரால் மீன் குழம்பு என்ற வார்த்தைகளை படித்துவிட்டு புகைப்படத்தை பார்த்தபோது அவை அனைத்தும் உணவாக தெரிந்தன. பின், முழுமையான உணவுடன் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் இனிதே முடிவுற்றது என்ற வரிகளை படித்துவிட்டு பார்த்தபோது அவை அனைத்தும் மலமாய் தெரிந்தது” என ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.
”பகுத்தறிவு என்றால் அடுத்தவங்க மதத்தை பத்தி தப்பா பேசுவது இல்ல. அவங்க நம்பிக்கைய புண்படுத்துறது இல்ல. விநாயகர் சதுர்த்தி கும்புடுகிறவன் எல்லாமே சங்கியா இருக்க மாட்டான். பகுத்தறிவு பேசுறவன் எல்லாமே யோக்கியனா இருக்க மாட்டான். தந்தை பெரியார் கூட எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல.. ஆனா உனக்கு நம்பிக்கை இருந்தா நீ போனு சொல்லி தான் ஆலய நுழைவு போராட்டமே நடத்தினார். கருணாநிதி வீட்டில் கூட விநாயகர் சதுர்த்தி கும்புடுவாங்க. அங்க போய் இதெல்லாம் சொல்லு. உன்னை எல்லாம் பெரிய போராளினு ஒரு காலத்துல நம்பினு இருந்தேன்” என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
”’சாப்பிடுறதுல பிரச்சனை இல்ல. அதை விநாயகர்சதுர்த்தி கூட ஏன் இணைத்து பதிவு போடவேண்டும்.? ஒரு ஆம்பள இப்படி ரம்ஜானுக்கு பன்றி கறி சாப்பிடுற மாதிரி பதிவு போட முடியுமா? மதச்சார்பற்றனா அனைத்து மதத்தையும் எதிர்ப்பது தானே? இல்ல ஹிந்து மதத்தை மட்டுமா? நடுநிலை என்ற பெயரில் கலகம் இழுக்கக்கூடாது” என கொந்தளித்துள்ளனர்.
”இவ்வாறான பதிவுகள் தேவையற்ற பிரச்சினைகளையும், மனவருத்தங்களையும் ஏற்படுத்தக்கூடும்.நாம் உண்மையாகவே அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்று நினைத்தால், எந்த மதத்தினரின் உணர்வுகளையும் வேண்டுமென்றே புண்படுத்தாமல் இருப்பது அவசியம்” என அறிவுறுத்தியுள்ளனர்.
ஷோபி பால்ராஜ் என்பவர், “சகோதரரே, நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை தாராளமாக சாப்பிடுங்கள்.
நீங்கள் விரும்பியதை சாப்பிடுவது உங்கள் தனிப்பட்ட விருப்பம். அதைப் பற்றிய எந்தக் கருத்தும் சொல்லவில்லை; சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால், நீங்கள் பதிவிட்ட பதிவில் சம்பந்தமே இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பண்டிகையை குறிப்பிட்டு, அதனுடன் இந்த விஷயத்தை இணைத்து பதிவிட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் கேள்வி. அதன் பின்னணியில் இருக்கும் உங்கள் நோக்கம் என்ன என்பதும் புரியவில்லை.
இதுபோன்ற விஷயங்களை வைத்து ஏதோ ஒரு புரட்சியை உருவாக்குகிறோம் என்று நினைப்பது, உண்மையில் புரட்சி அல்ல. மாறாக, தேவையில்லாத பிரச்சனைகளையும் கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கும் முயற்சியாகத்தான் அது தோன்றுகிறது.
எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் ஆரோக்கியமானதாகவும், அனைவரையும் மதிக்கும் வகையிலும் ஒன்றினைக்கும் வகையிலும் இருக்க வேண்டும். அதனால், நீங்களும் கொஞ்சம்… அன்பை விதைப்போம்” எனக் கூறியுள்ளார்.
