கோட்டைக்கு உளவுத்துறை மூலமாக ஒரு ரிப்போர்ட் போயிருக்கிறது. அந்த ரிப்போர்ட்டில் ஸ்டாலின் மிசா சம்பவம் குறித்து முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு கூட்டமே வரவில்லை. மக்களிடம் இதற்கு பெரிதாக ஆதரவு எதுவும் இல்லை” என தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால், மேடையில் ஆ.ராசா, முதலமைச்சரையும் அமைச்சர் நிர்மல் குமாரையும் ஒருமையில் பேசி எல்லை மீறிய ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே அண்டர்லைன் செய்து முதலமைச்சர் விஜயின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.

”எனக்கு சந்தேகம் இருக்கு.. நீ யாருக்கு பொறந்த என முன்பு ஒரு தடவை உதயநிதி ஸ்டாலின் பெண்களை பற்றி பேசிய போது அவசரப்பட்டு கைது நடவடிக்கையில் இறங்கி பிறகு நீதிமன்றத்தில் அது வேற மாதிரி முடிந்து போனது அனைவரும் அறிந்ததே. ஆகையால் இந்த முறை ஆ.ராசா விஷயத்தில் அவசரப்பட்டு ஏதோ ஒரு கேஸை போட்டு உப்பு சப்பு இல்லாமல் போய்விடக்கூடாது என ஆளுங்கட்சி தரப்பு ரொம்பவே உஷாராக இருக்கிறதாம்.
அதுமட்டுமில்லாமல் ஆ.ராசா எம்பியாக இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சரும்கூட. சட்டத்தை நல்லா கரைத்து குடித்தவர். அதனால் மேடையில் தான் பேசுவது வெறும் அவதூறு வழக்காக மட்டும்தான் போட முடியும். அதுக்குதான் இது பொருந்தும். இதை வைத்து தன்னை உடனே கிரிமினல் வழக்கில் கைது செய்ய முடியாது என்கிற சட்ட நுணுக்கத்தை பக்காவாக தெரிந்து வைத்துக் கொண்டுதான் இப்படி ஆவேசமாக பேசி இருக்கிறார். அதனால் இதில் ரொம்ப கவனமாக மூவ் பண்ணனும் என இப்போது போலீஸ் உயரதிகாரிகளும் ஆளுங்கட்சியோட லீகல் டீமும் உட்கார்ந்து ஆ.ராசாவிநன் இந்த சட்ட திட்டத்தை எப்படி உடைப்பது என ரொம்ப தீவிரமாக யோசித்து வருகிறார்களாம்.

வெறும் அவதூறு வழக்காக போடாமல் வன்முறையை தூண்டுகிறது அல்லது அமைதியை கெடுக்கறது மாதிரியான கடுமையான பிரிவுகளில் வழக்குப்போட்டு ஆ.ராசாவை கைது செய்ய முடியுமா? என சட்ட வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தவெக வழக்கறிஞர் அணியும் தொண்டர்களும் தமிழ்நாடு முழுவதும் இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் மனுக்களை கொடுத்து இந்த லீகல் பிரஷரை ஏற்றிக் கொண்டே வருகிறார்கள். திமுக கண்டன ஆர்பாட்டத்தில் ஆ.ராசா பேசிய இந்த பேச்சும் அதற்கு எதிராக தவெகவினர் கொடுக்கிற புகார்களும், எடுக்கப்போகிற நடவடிக்கைகளும் ஆ.ராசாவை உண்மையிலேயே கைது செய்ய வைக்குமா? இல்லை வழக்கமான ஒரு பொலிட்டிகல் ஃபைட்டாவே முடிந்து விடுமா? என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
