Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Ajith vijay

லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், அஜித் குமார் பங்கேற்ற கார் ரேஸை தொடங்கி வைத்ததுதன் இரண்டு நாட்களாக ஹாட் டாபிக். விஜய்க்கும், அஜித்துக்கும் இடையிலான நட்பை கொண்டாடி வரும் வேளையில், அவர்களது ரசிகர்களுக்கு இடையே சிண்டு முடியும் வேலைகளையும் சமூக வலைதளங்களில் நெகட்டிவாக பகிர்ந்து வருகிறது ஒரு கூட்டம்.

Ajith vijay

இதன் ஒரு பகுதியாக அஜித் ரசிகர்களை தூண்டி விடும் வகையில் பலரும் பல்வேறு வகையிலான தகடு தித்த வேலையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில் அஜித் ரசிகர் மன்றமே இல்லாத நிலையில் அவரது ரசிகர்கள் என்ற போர்வையில் ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்தக் கடிதத்தில். ” பொருள் : நடிகர் அஜித் குமார் அவர்களின் ரசிகர் என்ற அடிப்படைப் பொறுப்பு மற்றும் அபிமானி நிலையிலிருந்து விலகுதல் பற்றிய அறிவிப்பு.

நான் ‘ரெட்டை ஜடை வயசு’ திரைப்படம் வெளியான காலத்தில் இருந்தே நடிகர் திரு. அஜித் குமார் அவர்களின் தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளேன். அவருக்காகவும், அவரின் மீதான என் அன்புக்காகவும் பலர் காட்டிய பகை மற்றும் ஏளனப் பேச்சுகளை எதிர்த்துப் பல முறை பலருடன் சண்டையிட்டும், கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டுக் களத்திலும் நின்றிருக்கிறேன். அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியைபும் தவறாமல் திரையரங்கிற்குச் சென்று கொண்டாடும் அளவுக்கு தீவிர ரசிகனாக இயங்கி வந்தேன்.

இதையும் படியுங்க  "என் இசையை கிராமங்களுக்கு கொண்டு சேர்த்தவர்!" – பாரதிராஜா மறைவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட உருக்கமான பதிவு

ஆனால், தற்போதைய சூழலில் எனது தனிப்பட்ட முடிவின்படி, இன்றிலிருந்து (13.09.2026) நடிகர் திரு. அஜித் குமார் அவர்களின் ரசிகர் என்ற அடிப்படை உறுப்பினர் மற்றும் தீவிர ரசிகர் என்ற நிலையிலிருந்து முறையாக விலகிக் கொள்கிறேன். இனிமேல் எனக்கும் திரு. அஜித் குமார் அவர்களுக்கும் இடையே ரசிகர் என்ற எந்தவிதமான அமைப்பியல் அல்லது அபிமானத் தொடர்பும் இல்லை என்பதை இந்த அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிவரும் காலங்களில் “பீப்பிள்ஸ் ஆஃப் தமிழ்நாடு” (People of Tamil Nadu) என்ற அடையாளத்தோடும், மக்களுக்கான ஒரு தனிநபராகவும் இயங்குவதே போதுமானது என்று முடிவு செய்துள்ளேன். இத்தனை காலம் என்னோடு பயணித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி” என கார்த்திக் ஜாக் என்கிற பெயரில் கடிதம் வெளியாகி உள்ளது. அந்த கார்த்திக் ஜாக்கின் எக்ஸ்தள ஐடியை ஆராய்ந்த போது அவர் திமுக அனுதாபி என்பது உறுதியானது.

இதையும் படியுங்க  மூன்று முகங்கள்... ஒரு மகுடம்! இயக்குநராக விஷாலின் அசுர அவதாரம்!"
DMK IT wing

இந்த ஒரு கடிதம் மட்டும் தானா? இன்னும் தேடிப்பிடித்ததில் இந்தக் கடிதத்தை போன்றே அசல் நகலெடுத்து பல போலி கடிதங்கள் வார்தைகள் மாறாமல் பல நபர்களும் வெளியிட்டுள்ளனர். இதன் பின்னணியில் திமுக ஐடி விங்க் செயல்படுவதாக நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மண்டையில இருக்க கொண்டைய மறைக்க மறந்துட்டீங்களடா..!

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago