Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

vijay vijay Sethupathy

லண்டனுக்கு சென்றிருக்கும் முதல்வர் ஜோசப் விஜய் அங்கு அஜித் குமார் கலந்து கொண்ட கார் பந்தயத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். லண்டன் விவகாரத்தை விட தற்போது விஜய் சேதுபதி விவகாரம் தான் சமூக வலைதளங்களில் சூடுபிடித்திருக்கிறது

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் ரொம்ப ரொம்ப சுமார், சுவராஸ்யமாகவே இல்லை என்று பலரும் புலம்பி வந்தார்கள். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி சொன்ன ஒரு விஷயத்தால் அந்த நிகழ்ச்சி பரபரப்பாகிவிட்டது. பிக் பாஸுல ஜனநாயகம் பற்றி மறைமுகமாக இல்லையாம் நேரடியாகவே பேசியிருக்கிறாராம் விஜய் சேதுபதி என பலரும் அந்த வீடியோவை தேடிக் கண்டுபிடித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனநாயக அறையில் ஆளும் அணி வெளியேறியதை பார்த்த விஜய் சேதுபதியோ, சட்டசபையில் பார்த்தது இல்லையா முனியம்மா?. ஆளும் அணி வெளியே போகக் கூடாது. எதிரணி தான் வெளியே போவாங்க என்றார். அதன் பிறகு லீடர் சாதிகாவை விஜய் சேதுபதி விளாசியது தான் விஜய் ரசிகர்களை கோபம் அடைய செய்திருக்கிறது.

இதையும் படியுங்க  தட்டி தூக்கிய விஜய்..! ரிசல்ட்டுக்கு முன்பே பேக்-அப்.. அறிவாலயத்தில் மொத்த கூடாரமும் காலி..!

“லீடர்ன்னா என்னன்னு தெரியாம, லீடர்ஷிப்ன்னா என்னன்னே தெரியாம, வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகள் அள்ளிக்கொடுத்துட்டு, பிரச்சினைகள் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல பழிய தூக்கிப் போட்டு தெறிச்சி ஓடுறது லீடருக்கான குவாலிட்டி இல்ல. அது ஏமாற்றுவேலை” என்றார் விஜய் சேதுபதி. அவர் ஒன்றும் சாதிகாவை இப்படி சொல்லவில்லை, நேரடியாகவே தமிழகத்தில் நடப்பதை தான் பேசியிருக்கிறார். யார் எதிர்கட்சி மீது பழி போடுகிறார்கள், ஓடினார்கள் என்பது தான் ஓட்டு போட்ட மக்களுக்கே தெரியும் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

விஜய் ரசிகர்களோ, விஜய் சேதுபதி நல்லவர் கிடையாது. தான் ஒரு நடிகன் என்பதை நிரூபித்துவிட்டார். மாஸ்டர் பட விழாவில் விஜய்ணா மீது பாசம் இருப்பது போன்று நடித்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் நடப்பதை பற்றி மட்டும் பேச தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். அதை விட்டுவிட்டு அரசியல் பேசக் கூடாது விஜய் சேதுபதி. அப்புறம் நீங்கள் செய்ததை எல்லாம் நாங்கள் எக்ஸ்போஸ் செய்வோம் என்கிறார்கள் அவர்கள்.

இதையும் படியுங்க  “ராஜினாமா செய்த தொகுதிக்கு மீண்டும் விஜய் விஜயம்… நன்றி நிகழ்ச்சி ஏற்பாடு!”

”வெகுஜன மக்கள் காணும் விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக தொடர்ந்து வன்மத்தை கக்கி வரும் விஜய் சேதுபதிக்கு விரிச்சுவல் வாரியர்ஸ் சார்பாக இறுதி எச்சரிக்கை விடுக்கிறோம். உனக்கு தைரியம் இருந்தால் அரசியலுக்கு வா.. இது போல் வெகுஜன மக்கள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் ஆளும் தவெக அரசை இழிவு படுத்தி புகழ் தேட வேண்டாம்.

VIJAY

தான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளரை அதிகரிக்க வேண்டி ஆளும் சாமானிய மக்களுக்கான TVK அரசை விமர்சிப்பதை இத்தோடு விஜய் சேதுபதி நிறுத்திக் கொள்ள வேண்டும். விஜய் தொலைக்காட்சி நிறுவனம் இது போன்ற பொது மக்களிடையே வன்மத்தை உமிழும் விஜய் சேதுபதி போன்ற நடிகர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அனுமதிப்பது ஏன்?

உடனடியாக விஜய் தொலைக்காட்சி நிறுவனம் நடிகர் விஜய் சேதுபதியை இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்க அனுமதிக்க கூடாது. இதுபோன்ற பொது வழியில் வன்மத்தை உமிழும் விஜய் சேதுபதியை வெகுஜன மக்கள் காணும் விஜய் தொலைக்காட்சி மூலம் அனுமதிக்க கூடாது என விஜய் தொலைக்காட்சிக்கு வேண்டுகோள் விடுகிறோம்” என விஜய் அனுதாபிகள் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்க  விஜய் ஆட்சி அமைக்கக்கூடாடது..! திமுகவின் 'ஆபரேஷன் அதிமுக..'! ஸ்டாலின் மாஸ்டர் பிளான்..!

திமுக அனுதாபிகளோ, ”இதுக்கு பேர்தாண்டா காலம் பேசுறது… 2 கோடி செலவு பன்னி ஒரு வாரமா லண்டனல்ல Race , அஜித்-விஜய் கலந்துக்குறாங்கனு நீங்க நடத்துன விளம்பர நாடகத்தையெலாம் 4 மணி நேரத்துல விஜய் சேதுபதி முடிச்சிவிட்டு போய்டாரு… மொத்த சோசியல் மீடியாலையும் இப்ப ட்ரென்டிங் விஜய் சேதுபதிதான்” என முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago