Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கு காரணமாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 தேதியும், அக்டோபர் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்று எதிர்க்கட்சியான திமுக இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு எஸ். பரந்தாமனும், தாராபுரம் (தனி) தொகுதியில் எஸ். சுகன்யா போட்டியிடுகின்றனர். தற்போது ஆளுங்கட்சியான தவெக மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதாவது வருகிற அக்டோபர் 06ம் தேதி அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாகக் கீழ்க்காண்பவர்கள் போட்டியிடுவார்கள்.

  1. மதுராந்தகம் (தனி) – திருமதி K.மரகதம் குமரவேல். Ex.M.L.A., கழகத் துணைப் பொதுச் செயலாளர்
  2. தாராபுரம் (தனி) திருமதி P.சத்தியபாமா, Ex.M.L.A., திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
இதையும் படியுங்க  எடப்பாடிக்கு அடுத்த பேரிடி! சாதாரணமா வரமாட்டேன் சார்… விஜய்யிடம் செல்லூர் ராஜூ போட்ட மெகா டீல்..!

கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago