Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Gem Veeramani

பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கில் தூக்கிய பின்னணியில் 90 ஏக்கர் நிலம் சிக்கி இருப்பது பெரிய பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இன்னொரு பக்கம் பெரிய இடத்து புள்ளிகள் நிலத்தை கேட்டு மிரட்டியும் அவர் தர மறுத்ததால் தான் இந்த லீகல் ரூட்டை கையில் எடுத்திருக்கிறார்கள் என வழக்கறிஞர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதமே நடந்து கொண்டு இருக்கிறது.

கிரானைட் கிங் வீரமணியை போக்சோ சட்டத்தில் அரெஸ்ட் செய்து சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தார்கள். ஆனால் வீரமணி மீது போக்சோ சட்டம் போட்டதே பல பெரிய சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது எனச் சொல்கிறார்கள். ஏனென்றால் போக்சோ சட்டப்படி பாதிக்கப்பட்டவர்களின் வயது சான்றிதல் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் டாக்டர்கள் சர்டிபிகேட் கொடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் புகார் கொடுத்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தெளிவாக வாக்கு மூலம் கொடுத்திருக்க வேண்டும். இதை வைத்து மட்டும்தான் போக்சோவில் செய்ய முடியும்.

ஆனால் வீரமணி விவகாரத்தில் இந்த போக்சோ விதிகள் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு சதிவலையை விரித்து அதில் வீரமணியை தட்டி தூக்கி இருக்கிறார்கள் என ஒரு பேச்சு ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் வீரமணியோடு இருப்பது யாரென்றே தெரியவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்பது கூட இன்னும் உறுதியாகவில்லை. அந்த வீடியோ இருக்கிற பென் டிரைவை கொண்டு வந்தவர்களும், ”ஐயா வீடியோ மட்டும்தான் கையில இருக்கு. ஆள் யாருன்னல்லாம் எங்ககிட்ட கேட்காதீங்க. அதை பத்தி எல்லாம் எங்களுக்கு ஒன்னும் தெரியாது. அதுல இருக்கறது வீரமணி தானே. அதை வச்சு அவர் மேல நடவடிக்கை எடுப்பீங்க என்றுதான் அதை கொடுத்தோம்” எனச் சொல்லி அவர்களும் கைய விரித்து விட்டார்கள்.

இதையும் படியுங்க  100 நாட்களிலேயே மக்கள் விரோத அரசு! லிஸ்ட் போட்டு தவெக அரசை கிழித்து தொங்கவிடும் வானதி சீனிவாசன்!

ஆனால் இது எல்லாவற்றையும் கேட்காமல் வீரமணி மீது போக்சோவை திடீரென பாய வைத்திருக்கிறார்கள். வீரமணி தரப்பில் உள்ள வழக்கறிஞர்கள் டீம் இந்த வழக்கை பார்த்துவிட்டு ”என்னயா அது கேஸ். எந்த ஆதாரமுமே இல்லாமல் போக்சோ போட்டுருக்காங்க. மேல் கோர்ட்டுக்கு வந்தால் இந்த கேஸ் ஒரு நிமிஷத்துல பஞ்சா பறந்துடும்” என் ரொம்ப கான்பிடெண்டா இருக்கிறார்களாம்.

அதைவிட முக்கியம் இந்த போக்சோ சட்டத்தை வீரமணி மீது ஒரு ஆயுதமாகத்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள் என கூறுகிறார்கள். இந்த கைது நடவடிக்கைக்கு பின் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டிவாக்கத்துக்கும், வெட்டுவாங்கணிக்கும் நடுவில் இருக்கிற ஒரு 90 ஏக்கர் நிலம்தான் காரணமாம். இது சம்பந்தமாக போலீஸ் மற்றும் வீரமணி வட்டாரத்தில் விசாரித்த வகையில் அந்த 90 ஏக்கர் நிலத்தை 2019லயே சில பேர் நோட்டமிட்டுருக்கிறார்கள். அப்போதும் இதே மாதிரி வீரமணி மீது புகார்கள் எல்லாம் கிளம்பியது. ஆனால், ”கம்ப்ளைன்ட் கொடுத்தால் மட்டும் போதாது. அதற்கு சரியான ஆதாரம் வேணும். சும்மா ஏதாவது கதை விடாதீங்கயா. ஆதாரத்தை கொண்டு வந்து காட்டுங்க” என கோர்ட் லெவலில் அது முகாந்திரம் இல்லாமல் போய் விட்டது.

இதையும் படியுங்க  பள்ளி விழாவில் வெடித்த சர்ச்சை..! மேயருக்கு செக் வைத்த சபாநாயகர்..! எகிறும் அரசியல் பரபரப்பு!
Veeramani

அப்போது எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சராக இருந்தார். வீரமணிக்கும் சொந்த ஊர் சேலம் என்பதுதான் இங்கே கொஞ்சம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அதன் பிறகு 2021ல் திமுக அரசு வந்ததும் ஆளுங்கட்சியோட முக்கிய குடும்பத்தில் இருக்கிற ஒரு பிசினஸ் புள்ளி இந்த 90 ஏக்கர் நிலத்தின் மீது ஒரு கண்ணு வைக்கிறார். அவர்களே வீரமணியை நேரில் அழைத்து ”கலைஞர் முதலமைச்சரா இருந்தப்போ உங்களுக்கு எவ்வளவு நன்மைகள் எல்லாம் செஞ்சார் தெரியுமா? அந்த பழைய நன்றி எல்லாம் மனசுல வச்சுக்கிட்டு, பேசாம இந்த 90 ஏக்கர் நிலத்தை எங்க பேர்ல எழுதி கொடுத்துருங்க” என ரொம்ப அன்பாக மிரட்டி இருக்கிறார்கள்.

ஆனால் அப்போது வீரமணி ”நிலமாவது, தருவதாவது… அதெல்லாம் கொடுக்க முடியாது. ஆள விடுங்கயா” எனச் சொல்லி ரொம்பவே பிடிவாதமாக மறுத்துவிட்டார் என்கிறார்கள். இந்த நிலைமையில்தான் 2025 அக்டோபர் மாதம் வீரமணி மீது குழந்தைகளை மையப்படுத்திய அந்த புகார் வெடித்தது. ஆனால் அதையும் வீரமணி சட்ட ரீதியாக பார்த்து சமாளித்து விட்டார்.

இதனையடுத்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைகிறது. கடந்த திமுக ஆட்சியில் வீரமணியிடம் அந்த 90 ஏக்கர் நிலத்தை கேட்டார்களோ, அதே இடத்தை இப்போதைய ஆளுங்கட்சியான தவெகவின் சில முக்கிய புள்ளிகளும் வீரமணியிடம் சென்று, ”சார் இந்த பழைய கதைய எல்லாம் விட்டுருங்க. அந்த நிலத்தை இப்ப எங்க கிட்ட கொடுத்துருங்க. சும்மா எல்லாம் கொடுக்க வேணாம். நாங்களா பார்த்து ஒரு நல்ல ரேட் சொல்றோம். அது உங்களுக்கு செட் ஆகலனாலும் பரவாயில்ல. எங்களுக்கே கொடுத்துருங்க” என கேட்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்க  ''21-ஆம் நூற்றாண்டின் 'எட்டப்பர்கள்' யார்..?" - விஜய் கூட்டத்தைப் புறக்கணித்த திமுக… பாஜகவுடன் மறைமுக 'டீலிங்..?

”எந்த ஆட்சி வந்தாலும் அந்தந்த ஆட்சியில் ஒருத்தனுக்கு என்னோட இடத்துல ஒரு குறி வச்சுக்கிட்டே இருக்கீங்களடா. ஏன்டா இப்படி அநியாயம் பண்றீங்க?” என நினைத்துக் கொண்டு அவர்களிடமும் வீரமணி ”எனக்கு அந்த நிலத்துல நிறைய ப்ராஜெக்ட் எல்லாம் பிளான் பண்ணி இருக்கேன்பா. சும்மா நிலம் நிலன்னு என் உசுர வாங்காதீங்க. ஆளை விடுங்க” எனச் சொல்லி மறுத்து இருக்கிறார்,

அவ்வளவுதான். ”என்னது நிலத்தை தர மாட்டியா? இரு உனக்கு எங்க ஆப்பு வைக்கணுமோ அங்க ஆப்பு வைக்கிறோம்” என வீரமணி மீது கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த பழைய புகார்களை தூசி தட்டி எடுத்து இப்போது போக்சோ சட்டத்தில் வைத்து தூக்கி இருக்கிறார்கள். ”நிலத்துக்காக போய் போக்சோல தூக்குவீங்களா?” என கோர்ட்டில் கேள்வி கேட்கிறபோது ”ஐயா மேலெடுத்து உத்தரவு ஐயா. நாங்க என்ன பண்றது?” என போலீஸ் விழிபிதுங்கப் போகிறார்கள். ஒருவேளை வீரமணி இந்த வழக்கில் இருந்து வெளியில் வந்தார் என்றால் யார் யார் வந்து நிலத்தை கேட்டார்கள். என்னெல்லாம் சொல்லி எப்படி எல்லாம் மிரட்டினார்கள் என பல அதிர்ச்சி தரும் உண்மைகளை உடைக்கப் போகிறார் என்கிறார்கள்.

இதனால் மூன்று ஆட்சிகளில் இருந்த நெருங்கிய வட்டாரங்களும் இதில் சிக்கப் போகிறார்கள் என கோட்டை வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago