Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay

செப்டம்பர் 10ஆம் தேதி இரவு 10 மணி அளவில் முதலமைச்சர் விஜய் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்னை ஏர்போர்ட்டில் இருந்து லண்டனுக்கு கெத்தாக புறப்பட்டு போனார். இதுவரைக்கும் எத்தனையோ முதல்வர்கள், பிரதமர்கள் ஏர்போர்ட்டில் இருந்து வெளிநாட்டுக்கு புறப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். கடைசியாக எடப்பாடியை பார்த்திருக்கோம், ஸ்டாலினையும், பார்த்திருக்கிறோம். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு முதல்வரை வழியனுப்ப ஒரு ஜன சமுத்திரமே ஏர்போர்ட் வளாகத்தில் திரண்டு நின்றது.

சாதாரணமாக முதல்வர் லெவல் விஐபிகள் வந்தால் அவர்களது கார் நேராக ரன்வே பக்கத்தில் இருக்கிற பிளைட் வரைக்கும் செல்ல செக்யூரிட்டி அனுமதி இருக்கிறது. விஜயும் அப்படி ஜாலியாக காரில் அங்கேயே போய் ரீச் ஆகியிருக்கலாம். ஆனால், முதல்வர் விஜயோ நானும் சாதாரண பயணிதான்பா. அவங்க எந்த வழியில கிளியரன்ஸ் வாங்கிட்டு ஃப்ளைட்டுக்கு போறாங்களோ, அதே வழியிலதான் நானும் போவேன் என அடம்பிடித்து சாதாரண பயணிகள் போகிற அந்த ரூட்டில் இறங்கி நடந்தார்.

Republic Tamil

முதல்வர் இப்படி தத்துவ வசனம் பேசினாலும் அதை செக்யூரிட்டி அதிகாரிகள் சும்மா வேடிக்கை பார்க்க முடியாது இல்லையா? காலையில் 6 மணியில் இருந்தே சென்னை கமிஷனர் அமல்ராஜ், இணை ஆணையர் விஜயகுமார் என இந்த மெயின் அதிகாரிகள் எல்லாம் ஏர்போர்ட்டில் ரொம்பவே டென்ஷனாக, பரபரப்பாக சில பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லாம் தூள் பறக்க செய்திருந்தனர். இதில் இன்னொரு திரில்லான விஷயம் என்னவென்றால் எப்பேர்பட்ட விஐபி வந்தாலும் அவர்களுடன் யார் யார் போகிறார்கள் என்கிற லிஸ்ட் ஒரு சில மணி நேரத்துக்கு முன்பே ஏர்போர்ட் ஆபீசர்களுக்கு தெரிந்து விடும். ஆனால், விஜய் உடன் செல்கிற அந்த ரகசிய லிஸ்ட் கடைசி வரை அதிகாரிகளுக்கே தெரியாத அளவுக்கு பயங்கர சீக்ரெட்டாக வைத்திருந்தனர்.

இதையும் படியுங்க  வசூல் ராஜாக்களுக்கு கல்தா… நேர்மைக்கு மட்டுமே சல்யூட்..! அதிரடி காட்டும் அமைச்சர் என்.ஆனந்த்..!
Republic Tamil

ஆனால் இவை எல்லாவற்றையும் விட ஏர்போர்ட் ஊழியர்களை அலற வைத்த ஒரு மெகா விதிமீறல் இருக்கிறது. இதுதான் மெயின் ட்விஸ்டே. ஏர்போர்ட் என்பது பயங்கர செக்யூரிட்டி கட்டுப்பாடுகள் இருக்கிற இடம். பயணிகள் கூட வருகிறவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் போக முடியும். அதன்பிறகு பயணிகள் மட்டும்தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் கூட இந்த விமான நிலையத்திற்கு வந்து போயிருக்கிறார்கள். அவர்கள் வரும்போதுகூட விமான நிலைய விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும். ஆனால் நேற்று இரவு விஜய் உள்ளே சென்றபோது எந்த கெடுபடியும் இல்லாமல் பிரைவேட் கேமராமேன்கள் எல்லாருமே அவருடன் சேர்ந்து போர்டிங் பாஸ் கவுண்டர் வரை கேமராவை தூக்கிக்கொண்டு ரொம்ப ஃப்ரீயாக, ஜாலியாக உள்ள நுழைந்து ஏகப்பட்ட ஸ்டில்ஸ் எடுத்து அனுப்பினார்கள்.

இதை பார்த்த ஏர்போர்ட் அதிகாரிகள் எல்லாம் ”யோவ் ஏர்போர்ட்ங்கிறது மத்திய அரசோட கண்ட்ரோல்ல இருக்கற இடம்யா? டெல்லியோட ஆசியும், அனுமதியும் இல்லாம எப்படிப்பா இவ்வளவு பெரிய விதிமீறல்களுக்கு போலீஸ் கிரீன் சிக்னல் கொடுத்துச்சு” என அவர்களுக்குள்ளேயே நக்கலாக பேச ஆரம்பித்தார்கள்.

இதையும் படியுங்க  எடப்பாடிக்கு 'செக்'..! அமித் ஷா கொடுத்த க்ரீன் சிக்னல்..! எஸ்.பி.வேலுமணி அதிரடி ஆட்டம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 hours ago at 10 hours ago