தமிழகத்தில் தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்து கொலை சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அவ்வப்போது கொலை சம்பவங்கள் அரங்கேறி தான் வருகிறது. இதுதொடர் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு சென்னையில் தவெக பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது விழுப்புரத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்தவர் அஜித் (25). இவர் அப்பகுதியில் சொகுசு விடுதி நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை அஜித்தை 4 பேர் கொண்ட கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அஜித் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சுத்துப்போட்டு சரமாரியாக வெட்டியது.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அந்தவித அச்சமுமின்றி அங்கிருந்து தப்பித்து சென்றது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமாக குறித்தும் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
