சாணார்பட்டி அருகே குளத்தில் அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட தவெக பிரமுகர்கள் இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம். மணல் திருட்டில் ஈடுபட்ட ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி பறிமுதல். தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டியில் உள்ள பெரிய குளத்தில் அரசு அனுமதியின்றி இரவு நேரங்களில் அதிகளவில் மணல் திருட்டு சம்பவம் நடப்பதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் நேற்று இரவு திண்டுக்கல் நகர துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்தி ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது தீர்த்தம்பட்டியில் உள்ள பெரிய குளத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருப்பதைதுணை கண்காணிப்பாளர் மற்றும் சாணார்பட்டி காவல் துறையினர் வாகனத்தை பிடிக்க சென்றபோது திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி லாரியை அப்படியே விட்டுவிட்டு மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இந்நிலையில் மணல் திருட்டில் பயன்படுத்திய ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி இரண்டையும் பறிமுதல் செய்து சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். பின்னர் மணல் திருட்டு சம்பந்தமாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தீத்தாம்பட்டியை சேர்ந்த தமிழக வெற்றி கழக பிரமுகர்கள் என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய ராசு மகன் (43) நாராயணன் மகன் சீரங்கன் (40) ஆகிய இருவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருட்டு மணல் கொள்ளை சம்பவத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பிரமுகர்கள் ஈடுபட்டு தப்பி ஓடிய சம்பவம் சாணார்பட்டிபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
