Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ராமஜெயம் ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட சென்னையில் உள்ள சுமார் 10 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் கே.என். நேரு.

இன்று கே.என். நேருவின் வீடு, அவரது சகோதரர் ராமஜெயத்தின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட சென்னையில் உள்ள சுமார் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை அடையாறு, திருவான்மியூர், ஆரியபுரம், அண்ணாநகர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும், முக்கியமாக எம்.ஆர்.சி. நகரில் உள்ள டிவிஎச் அலுவலகத்திலும் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

டிவிஎச் அலுவலகம் பல அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடமாக உள்ளது. அந்தக் கட்டடத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு அலுவலகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், அங்கும் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்க  "அன்று பனையூரில் தோளில் கை... இன்று கோட்டையில் மௌனம்!" - முதல்வருக்கு தூய்மைப் பணியாளர்களின் நேரடி கேள்வி! 

சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களை மிரட்டி பணம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.என். நேருவுக்கு சம்பந்தப்பட்ட இடங்கள் மட்டுமல்லாமல், அவரது சகோதரர் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை முதல் பல்வேறு இடங்களுக்குச் சென்ற அதிகாரிகள், கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர்களுக்குத் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சிக் காலத்தில் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களை மிரட்டி பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தற்போது இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சோதனை முடிவடைந்த பின்னர், ஆவணங்கள் உள்ளிட்ட என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன, எவ்வளவு பணம் அல்லது திரவ ரொக்கம் கைப்பற்றப்பட்டது, தங்கம் உள்ளிட்ட பொருட்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டனவா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிக்கை வாயிலாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க  திருமாவின் திமுக ட்ரம் கார்டு.. விசிக-வின் டபுள் கேம்..! கூட்டணிக்குள் வரும் பாமக..! தவெக எடுத்த அதிரடி முடிவு..!

தற்போது சென்னையில் நடைபெற்று வரும் சோதனைகளைப் பொறுத்தவரை, எம்.ஆர்.சி. நகரில் உள்ள டிவிஎச் கட்டடம், அடையாறு, திருவான்மியூர், ஆரியபுரம், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கே.என். நேருவுக்கு சம்பந்தப்பட்ட இடங்கள் மட்டுமல்லாமல், அவரது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவரது சகோதரர்களுக்குத் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் இந்தச் சோதனையை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனை இன்று முழுவதும் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago