Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tamil Nadu Weatherman

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இன்று மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சுமார் 7.6 கிமீ உயரத்தில் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. நேற்று தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவிய பலவீனமான காற்றழுத்தத்தாழ்வுப் பாதை மேல் குறிப்பிட்ட காற்றழுத்த தாழ்வு பாதையுடன் இணைந்துள்ளது.

இதையும் படியுங்க  அன்றே சொன்னார் ஜெயலலிதா..! இன்று  நிஜமாக்கிய விஜய்..! ஜே.சி.டி.பிரபாகரனை நெகிழும் அம்மாவின் நிழம்..!

இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

அதேபோல நாளை முதல் 0ம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். அதேபோல் 09 மற்றும் 10 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இன்று முதல் 08ம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்... மகளிருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சி.எம்.விஜய்... யாருக்கெல்லாம் கிடைக்கும், நிபந்தனைகள் என்ன? 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மதுரை–சிவகங்கை பகுதிகளில் தொடர்ந்து மழைக்கான சாதகமான சூழல் நிலவுவதால், இப்பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை பெய்யக்கூடும். இன்று இப்பகுதி முழுவதும் மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago

You missed