Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் 03.09.2026 அன்று மாலை, கல்லூரியில் பயின்றுவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வி சுபிதா (வயது 19), த/பெ. சேகர் என்ற மாணவி பள்ளியில் பயின்றுவரும் தனது சகோதரிகளான செல்வி நிவேதா (வயது 17), த/பெ. சேகர். செல்வி தனுஸ்ரீ (வயது 13), த/பெ. சேகர் மற்றும் செல்வி அபிநயா (வயது 12). த/பெ.ரமேஷ்பாபு ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்லும்போது, தனியார் கல்லூரிப் பேருந்தில் மோதிய விபத்தில் நிவேதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகியோர் சம்பவ இடத்திலேயும். சுபிதா என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவிகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  திமுக கூட்டணி என்ற ஒன்றே இல்லை.. ஸ்டாலினுக்கு எச்சரிக்கை..! (மா) கம்யூனிஸ்ட் தடாலடி..!
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago

You missed